இப்போதே ஆட்சியை கவிழ்க்காமல் விட்டு விட்டால், அது  எதிர்காலத்தில் நமக்குத்தான் நெருக்கடி அதிகமாகும் என செந்தில் பாலாஜி சொல்ல, அதற்கு  ஸ்டாலினோ, முழு பதவிக் காலமும் நீடித்தால் அதிமுக இன்னும் அதிக கெட்ட பெயரைச் சம்பாதிக்கும் என்று நினைக்கிறாராம். ஆனால், செந்தில் பாலாஜியோ, கெட்ட பெயரைவிட இன்னும் கோடி கோடியாக அவர்கள்  சம்பாதித்து விடுவார்கள். அதை வைத்து சட்டமன்றத் தேர்தலில், இப்போது கொட்டிய பணத்தை விட இன்னும்  அதிக பணம் செலவு செய்வார்கள் அதனால் நமக்கு இன்னும் சிக்கலை உண்டாக்கும் என்பதால் ஆபரேஷனை இப்போதே தொடங்கியுள்ளாராம்.

ஜெயலலிதா மரணம்,பன்னீர் தர்மயுத்தம், சசிகலா ஜெயில், தினகரனின் தனிக்கட்சி அவதாரம் என அதிமுக ஆட்டம் கண்டு கிடந்தாலும், இந்த ஆட்சியை எப்பப்பா கவுப்பாரு தலைவரு? என்பதுதான்.  இவ்வளவு நாளாக அதுவே கலைந்துவிடும் என சொல்லிவந்த நிலையில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல்,  இடைத்தேர்தலில்  மொத்தமுள்ள 22 தொகுதிகளில் 13 இல் திமுக வெற்றி பெற்றது. 9 இடங்களில் வெற்றி பெற்ற அதிமுக நூலிழையில் சட்டமன்றத்தில் தனது மெஜாரிட்டியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 

இடைத்தேர்தல் மூலம் எப்படியாவது ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்று கணக்குப் போட்ட திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் இந்த ரிசல்ட்டைப் பார்த்து பிரமாண்ட வெற்றியை அடைந்தும் சோகத்தில் ஆழ்ந்தனர். ஆனாலும், அதிமுகவிலேயே அதிமுகவிலேயே  உறுப்பினர்களை தூக்கி ஆட்சியக் கவிழ்த்தே தீர வேண்டும் என்று  முக்கிய புள்ளிகள் பிளான் போட்டது அந்த டீமில் செந்தில்பாலாஜி, பொன்முடி,ஏ.வ.வேலு,ஜெகத்ரட்சகன் என நான்கு ஜாம்பவான்களும் களமிறங்கினர்.

இதற்க்கு முதல்கட்டமாக  ஸ்டாலின் ஓகே சொல்ல திமுக மாவட்ட செயலாளர்கள் சொந்த ஏரியாவில் உள்ள எம்.எல்.ஏக்களை தூக்க ஸ்கெட்ச் போட்டனர்.  ஆனால், அவர்களுக்கு கொடுக்க வேண்டியதை யார் கொடுப்பது என்ற நிலையில்தான் தயங்கி தயங்கி நின்றனர்.‘இப்போதுதான் தேர்தலுக்காக துடைத்து எடுத்து செலவு பண்ணிட்டு நிக்கிறோம். அதுக்குள்ள நாங்க எப்படிக் கொடுக்கறது என பல மாசெக்கள் தலையை சொரிந்துகொண்டு நிற்க, இந்த ஆபரேஷன் காஸ்ட் மொத்தத்தையும் தானே ஏற்பதாகச் சொல்லி செந்தில்பாலாஜியே கில்லியாட்டம் முன்னணி வந்து நின்னாராம். முதலில் தலைமை இதற்கு ஒ.கே. சொன்னாலும் இவ்வளவு பெரிய பொறுப்பை சில மாதங்களுக்கு முன் கட்சிக்கு வந்த செந்தில்பாலாஜியிடம் ஒப்படைப்பதா? இது தங்களுக்கு அவமானமாக நினைத்தனர் முக்கிய புள்ளிகள் சிலர்.  

இந்த விஷயத்தில் யாரும் ஈகோ பார்க்க வேண்டாம், இப்போதே ஆட்சியைத் கலைப்பது தான் சரியானதாக இருக்கும். ஆட்சியை கலைக்க வேண்டிய மொத்த பொறுப்பையும் என்னிடம் கொடுங்கள்.  ஆட்சியை கழிக்க வேண்டிய எம்.எல்.ஏ.க்களை கச்சிதமாக இங்கே கொண்டு வருகிறேன். அதற்கான ஆட்கள், பணபலம் என என்னிடம்  உள்ளதாக என்று  கறாராக சொன்னாராம் செந்தில் பாலாஜி. 

நடந்து முடிந்த தேர்தலில் அதிமுகவில் துணை சபாநாயகராக இருந்த தம்பிதுரையை 4 லட்சம் ஒட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தும், அரவக்குறிச்சியில் தனக்கு எதிராக ஒரு பக்கம் அதிமுக, மற்றொரு பக்கம் அமமுக என கோடிக்கணக்கில் செல்வது செய்தாலும், ஜஸ்ட் லைக் தட்டுன்னு அசால்ட்டா சொல்லியடிச்ச செந்திபாலாஜி மீது நம்பிக்கை இருப்பதால்,  மொத்த ஆப்ரேஷனையும் சக்ஸஸா முடிக்க களமிறங்கியுள்ளதால், அதிமுக கூடாரம் கதிகலங்கிப்போயுள்ளதாம்.