தினகரனின் அமமுகவிலிருந்து திமுகவிற்கு வந்த செந்தில் பாலாஜியின் அடுத்தடுத்த நகர்வுகள், திமுக முக்கிய புள்ளிகளையே பொறாமைப்பட வைத்தது. வந்ததும் மாவட்ட பொறுப்பாளர் பதவி, இடைத்தேர்தலில் சீட் என எல்லாமே பாசிட்டிவ்வாகதான் அமைந்தது. திமுக தனக்கு கொடுத்த வேலையை கட்சிதமாக செய்து முடிக்கும் செந்தில் பாலாஜி, அடுத்து செய்யவிருக்கும் சிறப்பான சம்பவம் அதிமுக வரலாற்றில் மட்டுமல்ல, திமுக ஹிஸ்டரியிலும் காலா காலத்துக்கும் நின்னு பேசும். அப்படி ஒரு தரமான சம்பவத்தை அசாத்தியமாக நடத்தவுள்ளார்.

நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் ஆளும் பிஜேபிக்கு, தமிழக ஆளும்கட்சியான அதிமுகவுக்கும் சாதகமாகவே வந்துள்ளது. எப்படியும் இந்த தேர்தல் முடிந்ததும் ஆட்சி கலைந்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த திமுக தொண்டர்களுக்கு,  இடைத்தேர்தல் முடிவு ஏமாற்றத்தை தந்தது.

அதிமுக எப்படியோ தனக்கு தேவையான தொகுதியை தடுமாற, போராடி  9 தொகுதிகளில் வெற்றி பெற்று அரசின் மெஜாரிட்டியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதையடுத்து, மக்களவைத் தேர்தலிலும், சட்டமன்ற இடைத் தேர்தலிலும் அதிக இடங்களைப் பெற்ற திமுக அதிமுக ஆட்சியை கவிழ்ப்பது எப்படி என்ற திட்டத்தைக் கையில் எடுத்தது. தலைமையின் இந்த அதிரடியால் திமுகவில் மாவட்டச் செயலாளர்கள் சிலர் தங்களது பகுதிகளில் உள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்களை தூக்க, காத்துக் கொண்டிருந்த சமயத்தில்  திடீரென ஸ்டாலின்  விருப்பம் காட்டாததால் நிர்வாகிகள் புலம்பிக்கொண்டிருந்தனர். 

இந்நிலையில், அரவக்குறிச்சி இடைத் தேர்தலில் நின்று ஜெயிச்ச செந்தில் பாலாஜி, சபரீசன் மூலம்  ஸ்டாலினுக்குக் சில செய்திகளை கொண்டு சேர்த்துள்ளார்.

அது என்னன்னா? இப்போதே ஆட்சியை கவிழ்க்காமல் விட்டு விட்டால், அது  எதிர்காலத்தில் நமக்குத்தான் நெருக்கடி அதிகமாகும் என செந்தில் பாலாஜி சொல்லியிருக்கிறார். ஆனால் ஸ்டாலினோ, முழு பதவிக் காலமும் நீடித்தால் அதிமுக இன்னும் அதிக கெட்ட பெயரைச் சம்பாதிக்கும் என்று நினைக்கிறாராம். ஆனால், செந்தில் பாலாஜி சொல்வதோ, கெட்ட பெயரைவிட கோடி கோடியாக இன்னும் அவர்கள் அதிகம் சம்பாதித்து விடுவார்கள். அதை வைத்து சட்டமன்றப் பொதுத் தேர்தலில் இப்போது கொட்டிய பணத்தை விட இன்னும்  அதிக பணம் செலவு செய்வார்கள் அதனால் நமக்கு இன்னும் சிக்கலை உண்டாக்கும் என சொன்னாராம்.

அதால், இப்போதே ஆட்சியைத் கலைப்பது தான் சரியானதாக இருக்கும். ஆட்சியை கலைக்க வேண்டிய மொத்த பொறுப்பையும் என்னிடம் கொடுங்கள்.  ஆட்சியை கழிக்க வேண்டிய எம்.எல்.ஏ.க்களை கச்சிதமாக இங்கே கொண்டு வருகிறேன். அதற்கான ஆட்கள் என்னிடம் தயாராக இருக்கிறார்கள் என்று  சொன்னாராம் செந்தில் பாலாஜி.

செந்தில் பாலாஜியின் இந்த ஐடியாவுக்கு ஸ்டாலின் தரப்பிலிருந்து ஓகே கிடைத்து விட்டதாம். , கடந்த சில நாட்களுக்குள் மூன்று அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு, முன்னாடியே குறிப்பிட்ட தொகையை கொடுத்துவிட்டார்களாம். மேலும் சில எம்.எல்.ஏக்கள், திமுக அணிக்கு வருவதற்காக, சஸ்பென்சாக மூவ் செய்து வருகிறார்களாம் செந்தில் பாலாஜி குரூப்.

அதுமட்டுமல்ல, எம்.எல்.ஏ.க்களைக் கொண்டு வந்த ஆபரேஷனில் ஈடுபட்டவர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில அதிமுக எம்.எல்.ஏ.க்களும் செந்தில் பாலாஜியின் வலையில் விழத் தயாராக காத்துக்கொண்டிருக்கிறார்களாம்.