முன்னாள் அமைச்சரும் டி.டி.வி.தினகரனின் வலது கரமாகவும் செயல்பட்டவர் செந்தில் பாலாஜி. இவர் திடீரென அமமுகவில் இருந்து விலகி  திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி கொங்கு மண்டலத்தில் செம்ம  பிஸியாக வலம் வருகிறார். 

இதனிடையே தன்னை திமுகவுக்க அழைத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கும் முன்னாள் அமைச்சரும் தி.மு.க மாநில விவசாய அணிச் செயலாளருமான கரூர் சின்னசாமியிடம் , செந்தில் பாலாஜி சில ஜென்டில்மேன் அக்ரிமென்ட்களைப்  போட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் கரூர் மாவட்டத்தில் செந்தில் பாலாஜிக்கு பரம எதிரியாக செயல்பட்டு வந்தவர் கரூர் சின்னசாமி.  கடந்த  2000-ஆம் ஆண்டில்  தி.மு.க-வில் இருந்து அ.தி.மு.க-வுக்கு செந்தில் பாலாஜி  வந்தபோது அ.தி.மு.க-வில் முக்கியப் புள்ளியாக இருந்தார் கரூர் சின்னசாமி.

ஆனால், செந்தில்பாலாஜியின் நெருக்கடி தாங்க முடியாமல்தான் தி.மு.க-வுக்குப் போனார் சின்னசாமி. ஆனால், தன்னை காலை வாரிய அதே செந்தில்பாலாஜிக்கு அரசியல் வாழ்க்கை கொடுக்க இப்போது தி.மு.க-வுக்கு அழைத்துப்போக இருக்கிறார் என்கின்றனர் விவரம் அறிந்த உடன்பிறப்புகள். இந்நிலையில் கடந்த மக்களவைத்  தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்ட தம்பிதுரைக்கு செந்தில் பாலாஜி பெரும் ஆதரவாக இருந்து செயல்பட்டார். ஆனால் அவர் எம்.பி.யாக ஜெயித்து முடித்தவுடன் செந்தில் பாலாஜியை மதிக்கவில்லை அதுமட்டுமா? செந்தில் பாலாஜியின் மாவட்டச் செயலாளர் பதவியையும் தம்பிதுரை பறிக்க காரணமாக இருந்தார். 

மேலும் கரூர் மாவட்டத்தில் தனது எதிரியான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் அமைச்சர் பதவி வாங்கித் தந்தார். அதற்குப் பழிவாங்கவே இப்போது வரும் எம்.பி தேர்தலில் தம்பிதுரையை மண்ணைக் கவ்வ வைத்து, கரூர் சின்னசாமியை ஜெயிக்க வைப்பதாக சபதம் போட்டுள்ளார் செந்தில்பாலாஜி. அந்த வகையில் வரும் லோக்சபா தேர்தலில் நீங்கள் போட்டியிடுங்க. உங்களை ஜெயிக்க வைக்கிறது என் பொறுப்பு. நமக்கு பொது எதிரி தம்பிதுரை தான், அவரை வீழ்த்திவிடுவோம், இனி கொங்கு மண்டலமே நம்ம கோட்டையாக தான் இருக்கணும், நீங்க டெல்லியை பாத்துக்கோங்க, நான் லோக்கல் அரசியலை பார்க்கிறேன் என ரகசிய டீல் போட்டாராம்.

தம்பிதுரை ஜெயிக்கவைத்ததே, செந்தில்பாலாஜி தான், சொந்த காசை தண்ணியாக செலவு செய்து எம்.பி ஆக்கினார். அதேபோல நம்மையும் செந்தில் பாலாஜி ஜெயிக்க வைப்பார் என்ற குஷியில் சின்னச்சாமியும் ஓகே சொல்லியிருக்கிறாராம்.