பள்ளி கல்வி துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு, ஒவ்வொரு அடியும் மிக கவனமாக எடுத்து வைக்கிறார். அந்த வகையில் கல்வி துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறார் செங்கோட்டையன். தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆங்கில வழி கல்வி கொண்டு வந்தது... சீருடையில் மாற்றம்... புதிய சிலபஸ் கொண்டு வந்தது, ஆங்கில திறனை வளர்க்க  ஆங்கில புலமை பெற்ற பேராசிரியர்களை லண்டனில் இருந்து வரவழைத்தது. மருத்துவ படிப்பு சேர்வதற்கு எதிர் கொள்ள வேண்டிய நீட் தேர்வுக்கு தயாராகும் வகையில்... இலவச நீட் தேர்வு மையங்களை ஏற்படுத்தி கொடுத்தது. மாணவர்கள் பள்ளி வரும் நேரம், வீடு திரும்பும் நேரம் காலை மாலை என அவர்கள் வருகை குறித்த பதிவை குறுஞ்செய்தியாக பெற்றோர்கள் மொபைல் எண்ணிற்கு அனுப்புவது. மாணவர்களுக்கு பயோ மெட்ரிக் பஞ்சிங் முறை, ஆசிரியர்களுக்கு புதிய சீருடையை அறிமுகப்படுத்தியது. 

ஆரியர்களுக்கும் பயோ மெட்ரிக் பஞ்சிங் முறை கொண்டு வந்தது என பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும் இந்த தருணத்தில்... மீண்டும் ஒரு அதிரடி திட்டத்தை கொண்டு வந்துள்ளார் அமைச்சர் செங்கோட்டையன்.

அதாவது தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு, நொடி பொழுதில் எந்த ஒரு விவரமும் தெரிந்து கொள்ள அனைவரிடமும் உள்ளது ஸ்மார்ட் போன். பொதுவாகவே மாணவர்கள் வாலிபர்கள், அதிக நேரம் இந்த ஸ்மார்ட் போனை தேவை இல்லாத விஷயங்களுக்காக பயன்படுத்துகிறீர்களா. வாட்ஸ் ஆப், பேஸ் புக் மூலம் நண்பர்களுடன் சாட்டிங் செய்வது. பொழுது போக்கிற்காக யூ டியூப் சமூக வலைத்தளத்தில் நேரத்தை கழிப்பது போன்ற வற்றை தடுக்கும் நோக்கில். இனி யூ டியூப் மூலம் பாடங்கள் காற்றும் முறையை தமிழ் நாட்டில் அறிமுகப்படுத்த உள்ளதாக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாட்டம் வாணியம்பாடி தொகுதியில் உள்ள இந்து மேல்நிலை பள்ளியில் நடைப்பெற்ற நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு   பேசிய செங்கோட்டையன் இந்த செய்தியை தெரிவித்தார். இவரின் இந்த பேச்சுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகிறார்கள்.