பன்னீர் செல்வம் தம்பி ஓ.ராஜாவின் பதவியேற்பு விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜுவும் கலந்து  கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களை சந்தித்தார், “தவறு செய்ததால் துணை முதல்வர் ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதிமுக கட்டுக்கோப்பான கட்சி, கட்சியில் யார் குற்றம் செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

சிறுபான்மையினர் நலனுக்கு எதிரான மத்திய, மாநில அரசுகளை விரட்டியடிக்கும் வரை தூங்கமாட்டேன், விரைவில் திமுக ஆட்சியமைக்கும் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறாரே என்னும் கேள்விக்கு, “ஸ்டாலின் நலமுடன் இருக்க வேண்டுமென நாங்கள் நினைக்கிறோம். எதிரிகள் வலுவாக இருந்தால்தான் எங்களுக்கு வேலை அதிகரிக்கும். கலைஞர் வல்லமை பொருந்தியவர் என்பதால்தான் திமுகவை எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் எதிரியாக எதிர்க்கட்சியாகக் கருதினார்கள். அவரை எதிர்த்தால்தான் அதிமுகவினர் சுறுசுறுப்பாக பணியாற்றினர்.அதுபோலதான் நாங்கள் ஸ்டாலினை நினைக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “ஸ்டாலின் போகிற போக்கை பார்த்தால் விரைவில் தூக்கமில்லாமல் மன உளைச்சலில் சிக்கப் போகிறார் என்பது தெரிகிறது. உதயநிதியை தனது வாரிசாக ஸ்டாலின் உருவாக்கிவிட்டார். ஆனால் கனிமொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று கூறினார்.

ஏற்கனவே, உதயநிதியை களத்தில் இறங்கியிருக்கும் ஸ்டாலின் மீதும் வருத்தத்தில் இருந்த கனிமொழி, மேலும் வருத்தம் அளிக்கும் விதமாக, டெல்லியில்  கனிமொழிக்கு முக்கியத்துவத்தை குறைத்துவிட்டு மருமகன் சபரீசனுக்கு பவர் கொடுத்துள்ளதால் சோகத்தில் இருக்கும் நிலையில் செல்லூர் ராஜு திமுகவில் வெடியை கொழுத்திப் போட்டுள்ளார்.