sellur is a scientist says wikipedia
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவை விஞ்ஞானி என்று விக்கிபீடியாவில் தகவல்களை திருத்தி நெட்டிசன்கள் குறும்பு செய்துள்ளனர்.
தகவல் களஞ்சியமான விக்கிபீடியாவில் பதிவேற்றப்பட்டுள்ள தகவல்களை யார் வேண்டுமானலும் திருத்தும் வசதி உள்ளது. தகவல்களை மேம்படுத்த அளிக்கப்பட்ட இவ்வசதியை சிலர் தவறாக பயன்படுத்துவது சமீப காலத்து வாடிக்கையாக மாறியுள்ளது.

தமிழக அரசியல்வாதிகளுக்கு கலாய் கொடுக்கும் விதமாக அவர்களது தகவல்களை நெட்டிசன் சமீபத்தில் மாற்றி அமைத்துள்ளனர்.
இந்தவரிசையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் தகவல்களும் இணைய விரும்பி ஒருவரால் எடிட் செய்யப்பட்டுள்ளது.
அதில் வைகை அணையின் நீர் ஆவியாகமல் தடுத்த விஞ்ஞானி செல்லூர் ராஜூ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கொளுத்தும் சூரியனுக்கே கூலிங் கிளாஸ் போட்டவர் தான் என்று கலாய்க்காமல் போனார்களே அதுவரை சந்தோஷம் தான்..
