seeman welcome kamal and questioned stalin
பணமதிப்பு நீக்க நடவடிக்கையை முதலில் வரவேற்ற ஸ்டாலின் தற்போது எதிர்ப்பது ஏன்? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், நியாயவிலைக் கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டதால் பன்னாட்டு முதலாளிகள்தான் பயனடைவார்கள் என தெரிவித்தார்.
இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் நியாயவிலைக் கடைகளே இல்லாத நிலை உருவாகும் என வேதனை தெரிவித்தார்.
எண்ணூர் துறைமுக பகுதியில் நேரில் சென்று பார்வையிட்டு மக்களிடம் கமல் குறைகளை கேட்டறிந்ததற்கு வரவேற்பு தெரிவித்த சீமான், பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முதலில் வரவேற்பு தெரிவித்த ஸ்டாலின், தற்போது எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்.
