ஊடக போலி நிருபர் ஒருவன், தாழ்த்தப்பட்ட தங்கச்சியைப் பேசி மயக்கி கெடுத்துவிடுகிறார். வீடியோ எடுத்துவைத்துக் கொண்டு அந்தப் பெண்ணை மிரட்டி, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.விடம் அனுப்புகிறான், அதன்பின் அவருடைய பி.ஏ.விடம் அப்பெண்ணை அனுப்புகிறான்  அயோக்கியப் பயலுகளா, என்ன கொடுமை? என ஆவேசமாக பேசியுள்ளார் சீமான். 

பெரம்பலூரில் இளம் பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை பற்றி நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையிடம் புகார் அளித்த வழக்கறிஞர் அருள்  குண்டர் சட்டமும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாலியல் குற்றவாளிகள் வெளியே இருக்க, புகார் கொடுத்தவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதா என்று  பொதுமக்களும் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

அரவக்குறிச்சியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள சீமான், “பெரம்பலூரில் ஓர் ஊடக போலி நிருபர், தாழ்த்தப்பட்ட தங்கச்சியைப் பேசி மயக்கி கெடுத்துவிடுகிறார். அதன்பின் அவர் அதை வீடியோ எடுத்துவைத்துக் கொண்டு அந்தப் பெண்ணை மிரட்டியே, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.விடம் அனுப்புகிறார், அதன்பின் அவருடைய பி.ஏ.விடம் அப்பெண்ணை அனுப்புகிறார்கள். அயோக்கியப் பயலுகளா, என்ன கொடுமை? இதையெல்லாம் தாங்காமல் கொடுமையை யாரிடம் சொன்னால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிந்த அந்த தங்கை, அருளிடம் கூறுகிறார். இதை அருள் காவல் நிலையம் சென்று புகார் செய்து வழக்காக்கி விட்டார்.

இதையடுத்து புகார் கொடுத்த நமது தம்பி அருள் மீது நடவடிக்கை எடுத்து, சிறையில் அடைத்து குண்டர் சட்டத்தையும் பாய்ச்சியிருக்கிறார்கள். என் தாய் மீது, என் தமிழ் மீது, என் தலைவன் பிரபாகரன் மீது  மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். இதற்கெல்லாம் ஒரு நாள் நீ எனக்குப் பதில் சொல்ல வேண்டும். நீ தப்பித்துச் சென்றுவிட்டால்கூட  உன் பேரன் பேத்திகள் என்னிடம் சிக்கி செத்துவிடும். தருமத்தின் வழி நின்று ஆட்சி செய்ய வேண்டும். எங்கள் ஆள் ஆளுகிறார் என்றால் எங்கள் ஆளாக ஆளுகிறாயா? அடிமையாக அல்லவா ஆளுகிறாய் என்று தமிழக முதல்வர் எடப்பாடியை தாறுமாறாக  தாக்கி பேசியிருக்கிறார் சீமான்.