தலைவனா இருப்பது கஷ்டம்.! அதுலயும் தமிழனுக்கு தலைவனாக  இருப்பது ரொம்ப கஷ்டம்...! சீமான் ஆவேச பேச்சு..! 

தலைவனா இருப்பது கஷ்டம்.. அதிலும் தமிழனுக்கு தலைவனாக இருப்பது ரொம்ப கஷ்டம் என நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் ஆவேசமாக பேசி உள்ளார்.

சீமான் பேச்சு பொதுவாகவே எப்படி இருக்கும் என யாருக்கு தான் தெரியாது. இதற்கிடையில் சமீபத்தில் நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் பேசிய சீமான், அரசியலுக்கு வர துடிக்கும் விஷால் முதல் ரஜினிகாந்த் வரை அனைவர் பற்றியும் கிண்டலாக விமர்சனம் செய்து உள்ளார்.

அவர் பேசியது," சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற நடிகர் விஷாலை பார்த்து, ஒருத்தர் சொல்றாரு வருங்கால முதல்வரே வருக என ... ஏண்டா எங்களை பார்த்தா எப்படி தெரியுது..? நாங்கள் என்ன கேனையா..? தம்பி இந்த சேட்டை செய்யுற காலம் எல்லாம் மலை ஏறி போச்சு ..தமிழர் வரலாறு என்றால் அது நாம் தமிழர் கட்சிக்கு முன்பு ..நாம் தமிழர் கட்சிக்கு பின்பு என்று தான் இருக்க வேண்டும் என ஆவேசமாக பேசி உள்ளார் சீமான். எங்களை ஆளுகிற மாதிரி கனவு கூட காண கூடாது... 

இதே போன்று,  நடிகர் பிரகாஷ் ராஜ் அவர்கள், நான் சொல்லும் போதெல்லாம்  எதையும் கேட்கல.. கடைசியில இப்ப, சீமான் சொல்வது தான் சரி என அவரே சொல்லிட்டார். இதே போல் நடிகர் ரஜினி காந்த்தும் ஒரு நாள் சொல்லுவார்...சீமான்  சொல்வது சரியென்று...

என் தம்பி அடிக்கடி ஒரு வார்த்தை சொல்வார்.. "தலைவராக இருப்பது ரொம்ப கஷ்டம்.. அதுவும் தமிழனக்கு தலைவராக இருப்பது ரொம்ப கஷ்டம் என்பார். அதுதான் உண்மையும் கூட . தொடர்ந்து பேசிய சீமான், நடிகர் விஜய் பற்றி எதிர் விமர்சனம் செய்வதும் அவருடைய நல்லதுக்கு தான் என்றும், இது தெரியாமல் சின்ன பசங்க என்னென்னமோ பேசுதுன்னு சொல்றாங்க.

விஜய் சூப்பர் ஸ்டார்னு சொல்றாங்க...அவருக்கு அடுத்த படியாக  தம்பி சிலம்பரசன் சூப்பர் ஸ்டாரா சொல்றாங்க... இவ்ளோ பெரிய தமிழ் நாட்டுக்கு மேலும் இரண்டு சூப்பர் ஸ்டார் இருந்தால் தான் என்ன? என கிண்டலும் கேலியாக பேசி உள்ளார் சீமான்

நான் எல்லாத்தையும் பறி கொடுத்து நிற்கிற ஆளு... நீ எல்லாத்தையும்  பறிக்கிற ஆளு என பாஜகவை பற்றியும் விமர்சனம் செய்து பேசி உள்ளார் சீமான். இவருடைய பேச்சு கேட்டு, அவருடைய கட்சி தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.