சீமானை கேணைப்பயனு திட்டும் திமுக பிரசன்னா...! திருக்குறளுக்கு விளக்கம் தெரியாத அரைவேக்காடு..!

தமிழ் தேசியவாதிகளுக்கும், தி.மு.க.வுக்கும் இடையில் எப்பவுமே ஒரு முறைப்பு இருந்து கொண்டே இருக்கும். அந்த வகையில் சீமானுக்கும், இக்கழகத்துக்கும் பொருந்தியே போகாது. ஆனாலும் இதுவரையில் நேரடியான மோதல் என்று வந்ததில்லை. ஆனால் முதல் முறையாக இப்போது எழுந்திருக்கிறது.

seeman slaem DMK prasanna

தமிழ் தேசியவாதிகளுக்கும், தி.மு.க.வுக்கும் இடையில் எப்பவுமே ஒரு முறைப்பு இருந்து கொண்டே இருக்கும். அந்த வகையில் சீமானுக்கும், இக்கழகத்துக்கும் பொருந்தியே போகாது. ஆனாலும் இதுவரையில் நேரடியான மோதல் என்று வந்ததில்லை. ஆனால் முதல் முறையாக இப்போது எழுந்திருக்கிறது. 

தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் ‘சிலந்தி’ பகுதியில் தங்களின் அரசியல் வைரிகளை போட்டுப் பொளப்பார்கள். ரஜினி, கமலெல்லாம் கடந்த சில மாதங்களில் மிக மூர்க்கத்தனமாக வாங்கிக் கட்டினார்கள். அந்த வகையில் லேட்டஸ்டாக சீமானை கடித்துவிட்டது சிலந்தி. விளைவு தி.மு.க.வையும், ஸ்டாலினையும் வெச்சு செய்ய துவங்கிவிட்டனர் தி.மு.க.வினர். இரு தரப்புக்கும் இடையில் ஒரு யுத்தமாக இது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

 seeman slaem DMK prasanna

சீமானுடனான முரண்பாடு குறித்து பேசும் தி.மு.க.வின் செய்தி தொடர்பாளரான தமிழன் பிரசன்னா “தமிழகத்தில் இருப்பவர்களை டி.என்.ஏ. டெஸ்ட் எடுத்து, ‘இவர்தான் உண்மை தமிழர்’ என சான்றிதழ் வழங்கும் அதிகாரத்தை யாரும் சீமானுக்கு கொடுக்கவில்லை. சர்டிஃபிகேட் கொடுக்க சீமான் என்ன பெரிய தாசில்தாரா? கருத்தியல் ரீதியாக யார் மீதும் விமர்சனம் வைக்கலாம், தப்பில்லை. ஆனால் பொதுமேடையில் அவனே, இவனே என்று பேசுவதை ஏற்கமுடியாதே. seeman slaem DMK prasanna

சீமான் அதைத்தான் செய்கிறார். தலைவர் கருணாநிதியுடன் அரை நூற்றாண்டு காலம் அரசியல் செய்த தளபதி ஸ்டாலினை மிக மோசமாக விமர்சிக்கிறார். அதனால்தான் வேறு வழியில்லாமல் நாங்களும் குட்ட வேண்டியதாயிற்று. என்னமோ  தன்னை பச்சைத்தமிழன் என்று பீற்றிக் கொள்கிறார் சீமான். ஆனால் அவருக்கு ஒரு திருக்குறளுக்கு உருப்படியாக விளக்கம் தெரியவில்லை கேவலம். ஒரு குறளில் திருவள்ளுவர் ‘மாடல்ல’ என்று ‘செல்வத்தை’ குறிப்பிடுகிறார். seeman slaem DMK prasanna

ஆனால் சீமானோ ‘மாடல்ல’ எனும் வார்த்தைக்கு காளை மாடு, பசுமாடு என்று அர்த்தம் கற்பிக்கிறார். அறிவியலுக்கு ஒத்துவராத, இலக்கிய மற்றும் இலக்கண பிழையுடன் பேசுவதால்தான் சீமானை கேணைப்பயல் என்கிறேன் நான். தமிழர்களுக்காக என்னமோ உயிரையே இழப்பது போல் பேசும் சீமானை பார்த்து ஒரு விஷயம் அழுத்தமாக சொல்கிறேன்....தமிழர்களுக்காக தன் பதவியையே இழந்தவர் கருணாநிதி. ஆனால் நீங்களோ பிரபாகரனின் படத்தை வைத்துக் கொண்டு பொய்யும், பிரட்டும் செய்து கொண்டிருக்கிறீர்.” என்று போட்டுத் தாக்கிவிட்டார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios