நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கெர்சேன் என்பவர் முகநூலில் பதிவிட்டதில், ‘’பிரணாப் முகர்ஜி எங்களை ஏமாற்றிவிட்டார்கள், காங்கிரஸ் கட்சி நம்மை கழுத்தறுத்து விட்டது, காங்கிரஸ் மற்றும் திமுக துரோகம் செய்து விட்டது. தனி தமிழ் ஈழம் தான் முடிவு, நாங்கள் விடுதலை புலிகளை என்றும் ஆதரிப்போம் என்று பேசிக்கொண்டு, விமர்சித்து மேடை தோறும் முழங்கிவிட்டு, அறிக்கை விடுத்துவிட்டு, துரோகிகள் என்று அவ்வப்போது பேசிவிட்டு தேர்தல் நேரத்தில் ஏதாவது ஒரு சிறிய காரணத்தை அறிக்கையாகயோ இல்லை பத்திரிக்கையாளர் மத்தியில் ஒரு பேட்டியை கொடுத்து விட்டு காங்கிரஸ்  திராவிட கூட்டணியில் தேர்தலில் போட்டுயிட்டு இருந்தால் சீமான் இன்று நாடாளுமன்ற அவையில் வைகோ, திருமாவளவன் போல இன்று அமர்ந்து இருக்கலாம்.

பிரபாகரன் பிறந்தநாள் அன்று Constitution Day நிகழ்வில் கலந்து கொண்டு இருக்கலாம். சோனியா பின்னாடி வைகோ அருகில் Constitution Day பதாகையை கையில் பிடித்துக்கொண்டு இருந்து இருக்கலாம். சட்டசபையில் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி, ஜவாஹிருல்லா போல சட்ட சபையில் தட்டிக்கொண்டு இருந்து இருக்கலாம். மாவீரர் நாள் நிகழ்வை ஏதாவது ஒரு வெளி நாட்டு தமிழர்கள் மத்தியில் வேல்முருகன், திருமாவளவன், கோவை ராம கிருஷ்ணன் போல எங்காவது ஒரு நிகழ்வில் பங்கேற்று திரும்பி இருக்கலாம்.

அவ்வாறு செய்யாமல் தனித்துவமாக விமர்சிக்கப்படுவதற்கு காரணம் ஒரு திராவிட கட்சிகள் பக்கம் தேர்தல் கூட்டணிக்கு செல்லாமல் தனியே இயக்குவது தான் காரணம். திராவிட லாபி என்பது மிக வலிமையானது. அதுவும் செய்தியை மக்களிடம் சென்று சேர்ப்பதில் தனித்துவம் வாய்ந்தது. கருத்துக்களை நிலை நிறுத்துவத்தின் அவர்கள் கோட்பாடு ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு நிகரானது. விடுதலை புலிகளுக்கு உதவுவதை, கடல் எல்லையை மூட வேண்டும் என்று திராவிடர் கருணாநிதி முடிவு எடுத்தவுடன், மீனவர்கள் தாக்கப்படுவது மீன் பிடிக்க செல்வதால் இல்லை விடுதலைப்புலிகளுக்கு உணவு பொருட்களை, எரி பொருட்கள் எடுத்து செல்வதால் தான் தக்கப்படுகிறார்கள்.

உண்மையாக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கவில்லை. கடத்தல்காரர்களை தான் தாக்குகிறார்கள் என்று தமிழ் பொதுமக்கள், திராவிட கட்சிகாரர்கள் மத்தியில் கருத்து உருவாக்கம் செய்தார்கள். மக்களும் உள்ளபடியே மீனவர் தாக்குதல்களை கடத்தல்கார தாக்குதல் என்று கருதினார்கள். கடைசியாக ஜாபர் சேட் போன்ற அதிகாரிகள் துணையுடன் மிக அத்தியாவசிய மருத்துவ பொருட்கள், இரத்தம் போன்ற பொருட்கள் கூட எடுத்து செல்லமுடியாத படி அனைத்தையும் கச்சிதமாக செய்து முடித்தார் கருணாநிதி என்ற தமிழின துரோகி.

இன்று திராவிட அரசியலை முற்றிலும் எதிர்க்கும் அரசியல் நிலையில் இருப்பதில் சீமான், மணியரசன் இருவரும் முக்கியமானவர்கள். அவர்களை ஒரு பொது கருத்தில் வீழ்த்த வேண்டும். அதற்கு திராவிடர்கள் கருத்துருவாக்கம் செய்ய நினைப்பது இருவரும் சாதியத்துக்கும், பார்பனியத்துக்கும் ஆதரவானவர். அதிலும் குறிப்பாக சீமான் நம்பகத்தன்மை சிறிதும் இல்லாதவராக கருத்துருவாக்கம் செய்ய முனைகிறார்கள். சீமான் இட்லி சாப்பிட்டேன் என்று கூறிய கருத்தின் சாராம்சம் என்னவென்றால் ஒரே வாரத்தில் அவர்கள் உணவு முறையை விட்டு நமது சாதாரண உணவை தேடுவார் என்ற கருத்தை புலிகள் முன்பே கணித்து இருந்ததாகவும் அந்த நிலைக்கு ஒரே வாரத்தில் வந்ததாகவும் பேசினார் என்பது என் புரிதல். ஆனால் அனைத்து திராவிட கருத்துருவாக்கம் செய்யும் ஊடகங்களும் சீமான் பேசியதை வெட்டி சீமான் போர் நேரத்தை கேளிக்கையாக பேசியதாக செய்திகளை வெளியிட்டார்கள்.

சீமான் பேச்சில், கருத்தில் இடத்துக்கு இடம் எனக்கும் மாற்று கருத்து உண்டு. வாக்கு அரசியலுக்கு வந்த அவர் வாக்கை மையப்படுத்தி அரசியல் பேசாமல் எந்த புள்ளியில் அரசியலுக்கு வந்தாரோ அதே புள்ளியில் நின்று தவறு, சரி பார்க்காமல், பொது மக்கள் என்ன கருதுவார்கள், நம் பேச்சு நமது அடுத்த கட்ட நிலைக்கு உதவுமா? என்று எந்த கணக்கு கூட்டல், கழித்தல் இல்லாமல் தனக்கு எது சரி என்று படுகிறதோ அதை அப்படியே பேசுவதால் இன்றய தமிழக அரசியல் நிலையில் சீமான் உண்மையில் ஒரு தனித்துவமான நபராக தான் எனக்கு தெரிகிறார்.

சேலம் 8 வழி இப்போதைய திட்டபடி தேவை இல்லை என்றார். அதை விட்டு விலகினாரா? டெல்டா பகுதியில் ஓ.என்.ஜி.சி குழாய்களை நான் வந்தால் தூக்கி வீசுவேன் என்று உறுதியாய் சொன்னார். இன்று அவர்களே அதை சொல்வதாக செய்தி வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூட போராடினர் இன்றும் விசாரணைக்கு சென்று வருகிறார்.

சென்னை ஆதி தமிழர் நிலம் ஆக்கிரமிக்க படுவதை எதிர்க்கிறார். சென்னையை ஆதி தமிழர் தனி தொகுதியாக மாற்றம் செய்ய ஆதரவு தெரிவிக்கிறார். தமிழர்களுக்கு வேளையில் முன்னுரிமை அதற்கு போராடுகிறார். இணையம் துறைமுகம் தேவையில்லை, நியூட்ரினோ திட்டத்தை எதிர்க்கிறார். இப்படி அவர் தன் கருத்தில் நிலையாக தான் உள்ளார். இப்படி அவர் நிலைப்பாட்டை அடுக்கிக்கொண்டே போகலாம். தமிழர்கள் நலம் சார்ந்து மிகுந்த நம்பகத்தன்மை உள்ள ஒரு சாதாரண எந்த அரசியல் அதிகாரமும் இல்லாத ஒரு சாதாரண எளிய மனிதனாகவே என் பார்வைக்கு காட்சியளிக்கிறார். உங்களை பார்வையை நீங்களும் கொஞ்சம் விசாலமாக சென்று பாருங்கள்.

அரசியல் வெற்றி, தோல்வியை தாண்டி சீமான் அவர் அரசியலில் என்ன எதிர்பார்த்து வந்தாரோ அதை அவர் திறமைக்கு செய்து உள்ளார் என்பது தான் என் பார்வை. அடுத்தகட்ட திட்டமிடலும் அடுத்தடுத்த சரியான நகர்வுகளும் தான் நாம் தமிழர் என்கிற தமிழ் தேசிய அரசியலுக்கு வெற்றியை தேடி கொடுக்கும். சீமான் அனைத்து ஆற்றல்களையும் தமிழர்க்கு என்று படை வேண்டும் என்று எண்ணிய பிரபாகரன் வைத்திருந்தது போல பல அறிவு ஜீவிகளையும் தன்னகத்தே இணைத்து பல தரப்பு அறிவுரைகளையும் ஆராய்ந்து தமிழர்களின் மேல் உண்மையில் அக்கறை கொண்ட அனைத்து தரப்பினரையும் அரவணைத்து அடுத்தகட்ட புலி பாய்ச்சலுக்கு தயாராக வேண்டும் என்பதே என்னை போன்ற நாம் தமிழர் தம்பிகளின் விருப்பம்’’எனத் தெரிவித்துள்ளார்.