Asianet News TamilAsianet News Tamil

ரஜினியுடன் சமரசமான சீமான்... அந்த அறிவிப்பை கேட்ட அடுத்த நிமிடமே மனம் மாறிவிட்டாராம்..!

அமைதி, நிம்மதியை விரும்பும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். 

Seeman reconciled with Rajini
Author
Chennai, First Published Oct 4, 2020, 2:16 PM IST

அமைதி, நிம்மதியை விரும்பும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். 

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ரஜினியை கடுமையாக எதிர்த்து வருபவர். ரஜினியை மிகவும் மதிப்பதாகவும், சினிமாவில் அவரை மிகவும் ரசிப்பதாக சொல்லும் சீமான் ரஜினியை அரசியல் ரீதியாக தான் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறுவார். காரணம் ஒரு தமிழன் தான் தமிழகத்தை ஆளவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று கூறுவார்.

 

Seeman reconciled with Rajini

இந்நிலையில், இது தொடர்பாக சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- வேறு ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பேன் என ரஜினி கூறியதில் இருந்து அவர் மீதான முரண்பாடு நீங்கியது. அவர் புகழ்ச்சியை மட்டுமே பார்த்தவர். யார் அவரை அரசியல் களத்தில் இறக்கி விடுகிறாரோ அவனே அவரை அவமானப்படுத்துவான். நாங்கள் சந்திக்கும் உட்கட்சியை பிரச்சனைகளை ரஜினி ஒருநாள் கூட சந்திக்கமாட்டார். 

Seeman reconciled with Rajini

அமைதி, நிம்மதியை விரும்பும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார். மேலும், சில கட்சிகளுக்கு கொள்கை முரண் இருந்தாலும் கூட்டணி வைத்துக் கொள்கின்றன. வருகிற தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் என கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios