எதுவும் இல்லை என்றால் திறந்து காட்ட வேண்டியது தானே.! தடுத்ததால் எதோ தவறு இருக்கிறது என்று தானே அர்த்தம்-சீமான்

வருமான வரித்துறை அதிகாரிகள் முறையாக சோதனை செய்வதில்லையென்றும், 1000 கோடி கிடைத்தால் அதில் 10 சதவீத கமிஷன் பெற்று கொண்டு சென்று விடுவதாக சீமான் விமர்சித்துள்ளார்.

Seeman has criticized that the Income Tax Department is conducting audits for the sake of the commission

எதுவும் இல்லையென்றால் பயம் ஏன்.?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை நந்தனத்தில் உள்ள அவரது இல்லத்தில்  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், நாடாளுமன்றத்தில் வைக்கப்படுவது சோழர் காலத்து செங்கோல் இல்லையென்றும், அது உம்மடி பங்காரு செங்கோல் என கூறினார். அதனை நாடாளுமன்றத்தில் வைப்பதால் தமிழர்களுக்கு என்ன பயன் என கேள்வி எழுப்பினார். இதனால் எதுவும் நடக்க போவதில்லை என விமர்சித்தார்.

நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவரை அழைக்காதது தவறு எனவும் அதற்காக  எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிப்பது சரியானதே என குறிப்பிட்டார். தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்துவது  தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், வருமான வரித்துறை அதிகாரிகளை சோதனை நடத்த முடியாமல் தடுக்க முயற்சித்தது தவறு என கூறினார். அமைச்சர் வீட்டில் எதுவும் இல்லை என்றால் திறந்து காட்ட வேண்டியது தானே, தடுத்ததால் எதோ தவறு இருக்கிறது என்று தானே அர்த்தம். 

Seeman has criticized that the Income Tax Department is conducting audits for the sake of the commission

கமிஷனுக்காக சோதனை

 வருமான வரித்துறை அதிகாரிகள் முறையாக சோதனை செய்வதில்லை. 1000 கோடி கிடைத்தால் அதில் 10 சதவீத கமிஷன் பெற்று கொண்டு சென்று விடுகிறார்கள். சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட கணக்குகளை வெளியிடுவதும் இல்லை. எல்லாம் கமிஷனுக்கு தான் சோதனை நடத்துகிறார்கள் என விமர்சித்தார். ஏற்கனவே நடிகர் விஜய் வீட்டில் எதற்கு சோதனை நடத்தினார்கள், சோதனை முடிந்த பிறகு எல்லாம் சரியாக இருக்கிறது என்று கூறினார்கள். அதற்கு அவர்கள் வருமான வரித்துறை அலுவலகத்தில் நடிகர் விஜய் சமர்பித்து இருக்கும் ஆவணங்களை சோதனை செய்திருந்தால் போதுமானதே என கூறினார். மக்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் நல்ல பெயரை கலங்க படுத்த வேண்டும் என்கிற நோக்கில் சோதனை நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

2006 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு சதுர அடி நிலம் கூட வாங்கவில்லை.! ஐடி சோதனையை எதிர்கொள்ள தயார்- செந்தில் பாலாஜி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios