வார்தா புயலில் பம்பரமாக சுழன்று இயங்கி நல்ல பெயர் எடுத்த முதல்வர் ஓபிஎஸ் ஏன் இப்போது வாய்மூடி மவுனமாக இருக்கிறார். நீங்களும் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தானே இருக்கிறீர்கள். அப்புறம் போராடும் இளைஞர்களை சந்தித்து எதாஅவது சொல்லுங்கள் இது என்ன மவுனம் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசு அதிகாரத்தில் இருப்பபவர்கள் என்ன செய்யனும். நாங்கள் தேர்வு செய்து எங்களுக்காக நிறுவிய அதிகாரம் அது ஏன் எங்களுக்காக ஏன் செயல்பட மாட்டேங்குது. அரசே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான நிலை எடுக்குது அப்படி இருக்கும் போது ஏன் அரசே தாக்குது. ஏன் முதல்வரோ அமைச்சர்களோ போராட்டகளத்திற்கு வர மறுக்கிறீர்கள்.

அட அங்கு கூட வரவேண்டாஅம் உங்களைப்போல் ஊடகங்கள் மூல போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பேசுங்கள் உங்கள் உணர்வை புரிந்து கொள்கிறோம் விரைவில் செய்கிறோம் என்று ஆதரவாக பேசினால் தானே சரியாக இருக்கும்.
சாதாரண ஒரு அமைப்புக்கும் நீதிக்கும் தொடர்பு இருக்கு. மக்களுக்கான நீதி இல்லை. பாராளுமன்றத்தின் 50 எம்பிக்களை பிரதமர் சந்திக்க மறுக்கிறார். ஆனால் பீட்டா போன்ற ஆனால் எம்பிக்களை சந்திக்க மறுக்கிறார். இதைத்தான் நாங்கள் ஏன் என்று கேட்கிறோம்.

அமீர்: உச்சநீதிமன்ற தீர்ப்பை காவலர்கள் மதிக்கிறார்கள் , தமிழக அரசு மதிக்கிறது என்கிறார்கள் ஆந்திராவில் முதல்வரே முன்னின்று நடத்துகிறார். ஆனால் இன்று ஒரு மாநில முதல்வர் அவருடை மக்களிடம் அவர் பேச வேண்டியதுதானே. இந்த போராட்டமே மத்திய அரசுக்கு எதிரானது தானே. அப்புறம் என்ன தயக்கம்.
சீமான் ; இதை கண்டுகொள்ளாமல் விட்டால் நாளை தொடரும். ஜல்லிக்கட்டு நடக்க கூடாது என்று தானே உச்சநீதிமன்றம் தடை. ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை நீக்க போராட கூடாது என்று சொல்லவில்லையே. முதல்வர் ஓபிஎஸ் ஏன் வாஅய் மூடி மவுனமாக இருக்கிறார்.
அமீர்: உச்சநீதிமன்றம் தடையை மீறி போராடுகிறோம் அப்படித்தானே கைது செய்யுங்கள் என்றுத்தானே சொல்கிறோம். முதல்வர் ஓபிஎஸ் வாய் திறக்க வேண்டும். இவ்வாறு சீமானும் அமீரும் தெரிவித்தனர்.
