தனிக்கட்சி துவங்க ரகசிய ஆலோசனை நடத்தியிருக்கிறார் முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன் ராவ். தமிழக முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன் ராவ், தனது பெயரை சுறுக்கி ஆர்.எம்.ஆர் பேரவை என ஒரு அமைப்பை நடத்தி வருகிறார். ஆந்திராவை சேர்ந்த இவர், சமீபத்தில் கோவைக்கு வந்திருந்தார். காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியவர், 18 ஜாதி அமைப்பு நிர்வாகிகளை அழைத்து ரகசிய ஆலோசனை நடத்தி இருக்கிறார். அப்போது ஆளுங்கட்சிக்கு எதிராக ஒரு அணியை திரட்டி, தனிக்கட்சி துவங்குவது குறித்து பேசியிருக்கிறார்.

 

அத்தோடு, கூட்டத்துக்கு வந்த நிர்வாகிகளுக்கு, கைநிறைய கவனிப்பும் கொடுத்திருக்கிறார். 'நீங்க எனக்கு ஆதரவு கொடுத்தால், உங்களுக்கு வேண்டியதை செய்கிறேன்' என உறுதி கொடுத்து விட்டு போயிருக்கிறார். ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., ஒருவர் தான் இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். வெறும் அரசு அதிகாரியாக தலைமைச் செயலராக இருந்தவரிடம் கட்சி துவங்கும் அளவுக்கு பணம் சேர்ந்தது எப்படி? பரம்பரை பணக்காரரோ.? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மு.தலைமை செயலாளர் ராமமோகன்ராவ் சாதிய கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலையை கடந்த 2 வருடங்களாக செய்து வருகிறார், பாஜகவின் உத்தரவின் பேரில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைக் கூட மூன்று நான்கு முறை சந்திப்புகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.  தமிழ்நாட்டில் அரசு சரியாக இல்லை. மிகப்பெரிய வெற்றிடம் இருக்கிறது என்று ராம மோகன் ராவ் அவ்வப்போது கூறி வருகிறார்.

அமைச்சர்கள் இருக்கக்கூடிய தலைமைச் செயலகத்திற்கு வருமானவரித்துறை அதிகாரிகள், சிபிஐ அதிகாரிகள் உள்ளே சென்று ரெய்டு நடத்தி தலைமைச் செயலாளர் அலுவலகத்திலே ரெய்டு செய்து ராமமோகன்ராவ் வீட்டிலே, அவரது அலுவலகத்தில் தலைமைச்செயலக அலுவலகத்தில் ரெய்டு நடத்தினார்களே? அதே ராம மோகன் ராவ்தான் இவர்.