இணையவழி நிகழ்நிலை சூதாட்டங்களை நிரந்தரமாகத் தடைசெய்வதற்கு விரைவில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுதியளித்த மாண்புமிகு முதலமைச்சர் ஐயா. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இணையவழி சூதாட்டங்களை நிரந்தரமாகத் தடைசெய்வதற்கு விரைவில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ள தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன், நீட் தேர்வினை ரத்து செய்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுமென அளுநர் உரை மூலம் தமிழக அரசு உறுதி செய்திருப்பதை வரவேற்பதாகவும் சீமான் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து பலரும் தற்கொலை செய்து கொள்ளும் நிலை இருந்து வருகிறது. இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன. பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ந்து தமிழக முதல்வருக்கு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன.இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். இதைப் பலரும் வரவேற்று பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழ்ர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதல்வரின் இந்த அறிவிக்பை வரவேற்று அறிக்கை வெளியிட்டள்ளார் அதில்,

இணையவழி நிகழ்நிலை சூதாட்டங்களை நிரந்தரமாகத் தடைசெய்வதற்கு விரைவில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுதியளித்த மாண்புமிகு முதலமைச்சர் ஐயா. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இணையவழி சூதாட்டங்களை நிரந்தரமாகத் தடை செய்வதற்கான வலுவான தடைச்சட்டத்தை எக்காரணம் கொண்டும் இனியொருமுறை நீதிமன்றங்கள் இரத்து செய்திட முடியாதபடி உரிய சட்ட நுணுக்கங்களுடன், நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் தமிழ்நாட்டின் கிராமப்புற ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் மருத்துவக் கனவினைச் சிதைத்தழித்துக் கானல் நீராக்கும் ‘நீட் தேர்வினை’ திரும்பபெறச் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படுமென்று, ஆளுநர் உரை மூலம் தமிழ்நாடு அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது சற்றே ஆறுதல் அளிப்பதாக உள்ளது என்று சீமான் கூறியுள்ளார். மேலும், மாணவச்செல்வங்களின் தொடர் தற்கொலைகளுக்குக் காரணமாகவுள்ள கொடிய ‘நீட் தேர்வினை’ நீக்குவதற்கான சட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமெனவும், அதற்காக தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும் அனைத்து ஆக்கப்பூர்வமான நன்முயற்சிகளுக்கும் நாம் தமிழர் கட்சி தனது முழுமையான ஆதரவை அளித்து, உறுதியாகத் துணைநிற்குமென்றும் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
