புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளும் ஜனவரி 4ம் தேதி தொடங்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார். 

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில் தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. அதன்படி 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் 8-ம் தேதி முதல் வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவையில் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;-கொரோனாவால் மூடப்பட்டு கிடக்கும் பள்ளிகள் ஜனவரி 4ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும். அன்றிலிருந்து 1ம் வகுப்பு முதல் அனைத்து வகுப்பினருக்கும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பள்ளிகள் செயல்படும்.

ஜனவரி 18-ம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் வழக்கமான நேரத்தில் முழுமையாக செயல்படத் தொடங்கும். அதாவது பள்ளிகள் காலை முதல் மாலை வரை செயல்படும் என்று அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.