கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகள் கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டுள்ள நிலையில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை.ஆனால் ஆந்திராவில் பள்ளிகள் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதிகள் அடிக்கடி மாற்றப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறப்பதற்கு தேர்வு நடத்துவதற்கு எதிர்கட்சிகள் கடுமையான அதிரடி காட்டி வருகிறார்கள். அதோடு கொரோனா தொற்று தாக்கம் அதிகரித்த படியே இருக்கிறது. சென்னையில் மட்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த படியே இருக்கிறது. ஜூன் 1ம் தேதி 10ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். அதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் ஜூன் 15ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஆகஸ்ட் 3 முதல் பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். மேலும் பத்தாம் வகுப்பு தேர்வுகளும் நடைபெறாமல் இருக்கும் நிலையில் ஜூலை மாதத்தில் இந்த தேர்வுகளை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு இந்த முடிவை அறிவித்திருக்கிறார் முதல்வர்.மேலும் பள்ளிகளை புனரமைப்பதற்கான ரூ.456 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிகள் நவீனமயமாக மாற்றப்படும் என்றும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.