Asianet News TamilAsianet News Tamil

அங்கன்வாடி முதல் கல்லூரி வரை... மாணவர்களை குஷியில் ஆழ்த்திய எடப்பாடியாரின் அதிரடி அறிவிப்புகள்...!


அங்கன்வாடி முதல் கல்லூரி கல்லூரி வரை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு எடப்பாடியார் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் மாணவர்களை மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவை என அறிந்து கொள்ளலாம்.... 

School to collage students got lot of benefits from ADMK Manifesto
Author
Chennai, First Published Mar 14, 2021, 7:09 PM IST

அதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரான  எடப்பாடி பழனிசாமியும் சற்று முன்வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் அறிக்கையில் என்ன மாதிரியான வாக்குறுதிகளை தரப்போகிறார் என வாக்காளர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். 

School to collage students got lot of benefits from ADMK Manifesto

தேர்தலின் நாயகனான தேர்தல் அறிக்கையை அதிமுக இன்று வெளியிட்டுள்ளது. அதில் மகளிர் பாதுகாப்பு, வேலை வாய்ப்பு, விவசாயிகள் நலன், மின் மிகை மாநிலம் உள்ளிட்ட அறிவிப்புகளோடு நிற்காமல் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். 

அங்கன்வாடி முதல் கல்லூரி கல்லூரி வரை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு எடப்பாடியார் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் மாணவர்களை மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவை என அறிந்து கொள்ளலாம்.... 

1. கல்விக் கடன் தள்ளுபடி 
2.அங்கன்வாடி குழந்தைகளுக்கு 200மி.லி. பால் வழங்கப்படும்
3.அனைத்து பள்ளிகளிலும் 10வகுப்பு வரை தமிழ் மொழிப்பாடம் கட்டாயம்
4.இரு மொழிக்கொள்கை தொடர்ந்து கடைபிடிக்கப்படும்
5.தனியார் பங்களிப்புடன் தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு காலை டிபன் வழங்கப்படும்
6.கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் 2ஜி டேட்டா 
7.UPSC,NEET,IIT-JEE,TNPSC ஆகிய தேர்வுகளுக்கு பயிற்சி மையம்
8.கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருதல் 
9.அவசியமான இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்குதல் 
10.காயிதே மில்லத் பெயரில் இஸ்லாமியப் பல்கலைக்கழகம் 

 

Follow Us:
Download App:
  • android
  • ios