Asianet News TamilAsianet News Tamil

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ... ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி நடவடிக்கை..!

அமமுகவில் இணைந்த சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜவர்மன் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுவதாக ஓபிஎஸ், இபிஎஸ் அறிவித்துள்ளனர்.

sattur mla rajavarman dismissed...OPS, EPS Action
Author
Tamil Nadu, First Published Mar 11, 2021, 2:35 PM IST

அமமுகவில் இணைந்த சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜவர்மன் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுவதாக ஓபிஎஸ், இபிஎஸ் அறிவித்துள்ளனர். 

சட்டமன்ற தேர்தலில் சீட் மறுக்கப்பட்டதால் சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் சத்தியமாக சொல்லுகிறேன் அதிமுகவை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. சசிகலா ஒருவரால்தான் அதிமுகவை காப்பாற்ற முடியும். சின்னம்மாவுக்கு செய்த துரோகத்திற்காக, மக்கள் அதிமுகவிற்கு பாடம் புகட்டுவார்கள் என அதிமுக தலைமை மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.

sattur mla rajavarman dismissed...OPS, EPS Action

இந்நிலையில், சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட  காரணத்தினாலும்  விருதுநகர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த எம்எல்ஏ ராஜவர்மன் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் அவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என கூறப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios