தமிழகத்தில் 46 வாக்குச்சாவடிகளில் தவறு நடந்து விட்டது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’தமிழகத்தில் 46 பூத்களில் தவறு நடந்துள்ளது. அதனை தலைமை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம். 46 வாக்குச்சாவடிகளின் மறு தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். தேனியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வீடியோ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. 13 மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 46 வாக்குச்சாவடிகளில் பிரச்சினை ஏற்பட்டது.

எந்தெந்த வாக்குச் சாவடிகளில் மறுதேர்தல் என விரைவில் தெரிய வரும். 13 மாவட்டங்களில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டால் மின்னணு வாக்குப்பதிவு இடமாற்றம் செய்யப்பட்டது. 13 மாவட்டங்களில் தேனி, ஈரோடு மாவட்டங்களில் மட்டுமே மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பற்றாக்குறை இருந்தது. கோவை மாவட்டத்தில் இருந்து 40 வாக்குப்பதிவு இயந்திரம், 20 விவிபேட் இயந்திரங்கள் தேனி தொகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாதிரி வாக்குப்பதிவு மையங்களில் சில அதிகாரிகள் தவறு செய்தது தெரிய வந்தது.

 

ஏற்கெனவே பூந்தமல்லியில் ஒரு வாக்குச்சாவடி, கடலூரில் ஒரு வாக்குச்சாவடி, பாப்பிரெட்டிபட்டியில் 8 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 10 வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப்பதிவு நடத்த தமிழக தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.