சசிகலா உறவினர்களிடம் இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய ரெய்டு நடந்திருந்தாலும் அது குறித்து சம்பந்தப்பட்ட சசிகலாவோ, விவேக்கோ அலட்டிக் கொள்ளவே இல்லை என்பது தான் தற்போதைய நிலை.. அது அது இருக்க வேண்டிய இடத்தில் பத்திரமாக இருப்பதால் வருமான வரித்துறையினரும் மண்டயப் பிச்சுக்கிட்டிருக்காங்க என்பதே உண்மை.

நடந்த 9 ஆம் தேதி சசிகலா உறவினர்கள் வீடுகள், அலுவலகங்கள், ஜெயா தொலைக்காட்சி , நமது எம்ஜிஆம் பத்திரிக்கை அலுவலகம், கோடநாடு எஸ்டேட் என நடந்து முடிந்த  மிகப் பெரிய ரெய்டில்  இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் சிக்கி சின்னாபின்னமானார் என்பதுதான் அனைவரின் எண்ணம். இதன் உச்சகட்டமாக ஜெயலலிதா வாழ்ந்த போய்ஸ் தோட்ட இல்லத்திலும் ரெண்டு நடந்தது.

ஏனென்றால்  விவேக் , அவரது சகோதரி கிருணப்பிரியாஇ ஷகிலா ஆகியோரது வீடுகளில்  இருந்து ஆவணங்கள், போயஸ் கார்டனில் இருந்து லேப் டாப், பென் டிரைவ் என அள்ளிக்கொண்டு போனது வருமான வரித் துறை. ஆனால், இதைக்குறித்தெல்லாம் விவேக் எந்தக் கவலையும் இல்லாமல் மிகக் கூலாக இருக்கிறார். தனது வீட்டில் இருந்து  டாகுமெண்ட், பென் டிரைவ், லேப்டாப் எல்லாத்தையும் எடுத்துட்டுப் போயிட்டாங்களே.. இதனால நமக்கு சிக்கல் எதுவும் வராதா?’ என விவேக்கிடம் அவருக்கு நெருக்கமானவர்கள் வருத்தத்துடன் கேட்டு இருக்கிறார்கள்.

அதற்கு விவேக்,அவங்க எடுத்துட்டுப் போன டாகுமெண்ட் எல்லாமே முறைப்படி நாம வருமான வரி கட்டியதுதான். எதுவும் விதி மீறலே கிடையாது. அவங்க எடுத்துட்டுப் போன லேப்டாப், பென் டிரைவ்களில் அம்மா இருந்த சமயத்தில் நடந்த அரசு விழா தொடர்பான படங்கள்தான் இருக்கும். அதைத்தவிர வேற எதுவுமே இருக்க வாய்ப்பு இல்லை. அதனால இந்த ரெய்டால நமக்கு எந்த சிக்கலும் வரவே வராது என சிரித்துக்  கொண்டே சொல்லியிருக்கிறார்.

ஆனால் 187 இடங்களில்  1800  அதிகாரிகள் அதிரடியாக ரெய்டு நடந்தது. கோடநாடு எஸ்டேட், போயஸ் கார்டன் என எல்லா இடத்திலேயும் ரெய்டு ரெய்டு விட்டு ஒரு ஆதாரம் கூடவா சிக்கல என்பது தான் தற்போதைய கேள்வியாக உள்ளது.

அப்படின்னா, ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் சொத்து தொடர்பான ஆவணங்கள், பணம் எல்லாம் எங்கே போனது? என்பது தான் வருமான வரித்துறையினரின் கேள்வியாக உள்ளது. ஆனால் இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரிந்த ஒரே ஆளு அது சசிகலா மட்டும்தான் !! என்று சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

ஜெயலலிதா மறைந்த அடுத்த சில நாட்களிலேயே பணம், சொத்து சம்பந்தமான டாகுமெண்ட்கள் எல்லாம் அது அது எங்கு இருக்க வேண்டுமோ அங்கு பத்திரப்படுத்தப்பட்டு விட்டது. ஏன் தற்போது எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ளவர்கள் சிலரிடம் கூட சொத்துக்கள் பத்திரப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த ரகசியம் தினகரனுக்கு கூட தெரியாது என்பதுதான் உண்மை.

ஆனால் டாக்குமெண்ட்டுகள் எங்கெங்கே பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்ற விவரம், விவேக்கிற்கு மட்டும் தெரியும் என்றும், அது தெரிந்தாலும், அதை எடுக்கவோ சம்பந்தப்பட்டவர்களை சந்திக்கவோ அவருக்கு அதிகாரத்தை சசிகலா வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. வருமான வரித் துறை அதிகாரிகள் எவ்வளவோ  முயன்றும் , சசிகலாவின் ஆணி வேர் எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடமும், இளவரசியிடமும் வருமான வரித் துறை  அதிகாரிகள்  விசாரணை நடத்தப் போவதாக சதகவ்லகள் வந்தபடி இருக்கின்றன. ஆனால், சிறைக்குள் இருக்கும் ஒருவரிடம் விசாரணை நடத்த வேண்டுமானால் அதற்கு பல விதிமுறைகள் இருக்கின்றன.

முதலில் நீதிமன்றத்திலும் , பின்னர் வருமான வரித்துறை உயர் அதிகாரிகளிடமும் அனுமதி வாங்க வேண்டும். அப்படியே விசாரித்தாலும் நான் 10 மாதங்களாக சிறைக்குள் இருக்கிறேன் எனக்கு எதுவுமே தெரியாது என்று சொல்லி விட்டால் என்ன செய்ய முடியும் அதிகாரிகளால்? இதனால்தான் என்னவோ  இந்த ரெய்டை எல்லாம் பார்த்து சசிகலா கொஞ்சமும் அலட்டிக்கொள்ளவோ, டென்ஷன் ஆகவோ இல்லை” என்று சிறை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ரெய்டெல்லாம் முடிந்தவுடன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சசிகலாவின் சகோதரர் திவாகரன் , வருமான வரித்துறையின் இந்த சோதனை தோல்வியில் முடிந்து விட்டது என்று கூறினார். அது உண்மையாகிவிடுமோ என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.