சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்தவுடன் அதிமுகவில் ஒருபோதும் இணைய மாட்டார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் காலியாக இருந்த நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதேபோன்று புதுச்சேரி மாநிலத்தில் காமராஜ் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. 2 தொகுதிகளிலும் அதிமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. 


இதையும் படிங்க;-  சோனியா சந்தித்த சில மணிநேரங்களிலேயே டி.கே.சிவகுமாருக்கு ஜாமீன்... நீதிமன்றம் அதிரடி..!

இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ, மன்னார்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அதிமுகவுடன் நாங்கள் இணைவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை. துரோகிகளிடம் ஒருபோதும் இணைய மாட்டோம். தற்போது விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக 2 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. இது ஒன்றும் புதியதல்ல. அவர்கள் ஆளுங்கட்சி. பணபலத்தால் மட்டுமே வெற்றி பெறும் நிலையில் உள்ளனர். 

இதையும் படிங்க;- நில அபகரிப்பு வழக்கு... நீதிமன்றத்திற்கு ஓடோடி வந்த மு.க.அழகிரி..!

மக்கள் செல்வாக்கால் அல்ல. கடந்த முறை திமுக ஆட்சி நடக்கும் போதும் கூட நடந்த இடைத்தேர்தலில் திமுக தான் வெற்றி பெற்றது. ஆட்சி முடிந்த பிறகு அதிமுகவில் நிறைய பேர் காணாமல் போய் விடுவார்கள் என்றார். அமமுக உள்ளாட்சி தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடும். இதில் நாங்கள் வெற்றி பெறுவோம். தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் தியேட்டர்களில் நடிகர்களின் படங்களுக்கு சிறப்பு காட்சிகள் நடைபெறுவது வழக்கமான ஒன்றுதான். இதில் எடப்பாடி அரசு, தலையிடுவது தேவையில்லாத ஒன்று. இது நடிகர்களை பழிவாங்கும் நடவடிக்கையாகும். அதிமுக ஆட்சியில் மக்கள் விரோத திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள் என விமர்சனம் செய்துள்ளார். 

சசிகலா உரிய நேரத்தில் சிறையில் இருந்து வெளியே வருவார். இப்போது வருவார், நாளைக்கு வருவார் என்ற யூகங்களுக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது என காட்டமாக தெரிவித்துள்ளார்.