நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து சசிகலா சொன்னதையே பத்திரிக்கையாளர்களிடம் அமமுக கொள்கைபரப்புச் செயலாளர் தங்க தமிழ்செல்வன் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

இதுகுறித்து சிறைக்கு சென்று பார்த்த நெருக்கமான ஒருவரிடம், ‘’ எடப்பாடியை முதல்வராக்கியதே நான் தான். என்னை சிறையில் வந்து ஒருமுறை கூட சந்திக்காத எடப்பாடியை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவரை சேலத்திற்கு அரசியல் அநாதையாக திருப்பி அனுப்ப வேண்டும். சின்னம், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என அவர்களை கூட நினைத்து பார்க்க வேண்டாம். 

யாரையும் நினைத்து கூட பார்க்க வேண்டாம். வைத்த நம்பிக்கையை நினைத்துப்பார்க்க வேண்டாமா? நம்பிக்கை துரோகம் செய்தவர்களை அவர்கள் பாணியிலேயே சென்று திருப்பி அடிக்கணும். நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது எதிர்த்து வாக்களிக்க வேண்டும். கண்டிப்பாக நம்ம ஆட்கள் அங்கே இருக்க வேண்டும். இடைத்தேர்தலில் ஜெயித்தால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் வரை அவர்களை புதுச்சேரியில் தனியாக தங்க வைங்க. 

மே மாதம் அவர்களுக்கு டபுள் அக்னி வெயிலாக இருக்கணும் மே 23ம் தேதி அன்னைக்கு என் கண்ணில் ஆனந்த கண்ணீர்தான் வரணும். ’’ என தனக்கு வேண்டியவர்கள் மூலம் டி.டி.வி.தினகரனுக்கு தகவல் சொல்லி அனுப்பி இருக்கிறார். அதைத்தான் தங்க தமிழ்செல்வன் தேனியில் பேட்டியாக கொடுத்திருக்கிறார் என்கிறார்கள்.