Asianet News TamilAsianet News Tamil

சசிகலா விசிட்..... எடப்பாடி அப்பீட்... இனிமேல் தான் ஆரம்பமே... அப்பல்லோவில் தொடங்கியது ஆட்டம்..!

எடப்பாடி பழனிசாமி எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் ஜெயலலிதா பயன்படுத்திய காரை எடுத்துக் கொண்டு அதிமுக கட்சியை கட்டிக் கொண்டு சசிகலா கவுண்டர் கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  
 

Sasikala Visit ..... Edappadi Upbeat ... It is just the beginning ... The game started at Apollo ..!
Author
Tamil Nadu, First Published Jul 20, 2021, 2:08 PM IST

ஜெயலலிதா பயன்படுத்திய காரை பெங்களூரு சிறையில் இருந்து ரிலீசாகும்போது பயன்படுத்தினார் சசிகலா. இப்போது மீண்டும் ஜெயலலிதா பயன்படுத்திய அதே காரை எடுத்துக் கொண்டு சுற்றுப்பயணத்தை கிளப்ப இருக்கிறார் சசிகலா. 

ஜெயலலிதா காலத்திலிருந்து அதிமுக அவைத்தலைவராக இருக்கும் மதுசூதனன் உடல்நலக்குறைவு காரணமாக ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையான அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மதுசூதனனைக்காண சேலத்திலிருந்து இன்று காலை புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி நேராக அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து மதுசூதனன் உடல் நலம் குறித்து விசாரித்துக் கொண்டிருந்தார்.Sasikala Visit ..... Edappadi Upbeat ... It is just the beginning ... The game started at Apollo ..!

அப்போது திடீரென சசிகலா மருத்துவமனைக்கு வந்தார். அவர் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவரது காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. சசிகலா வந்துள்ள தகவல் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனை வந்து 10 நிமிடம் ஆகியிருந்த நிலையில் சசிகலா வருவதை அறிந்த எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து வெளியேறினார். பின்னர் சசிகலா மருத்துவமனைக்கு வந்தார். அவர் நேராக மருத்துவர்களிடம் சென்று மதுசூதனன் உடல் நலத்தை விசாரித்தார்.Sasikala Visit ..... Edappadi Upbeat ... It is just the beginning ... The game started at Apollo ..!

ஆனால் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் இருக்கும் விஷயம் கேள்விப்பட்டும் தாமதிக்காமல் மருத்துவமனைக்கு வந்துள்ளார் சசிகலா. சிறையில் இருந்து வந்த சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அறிவித்தார். தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த பிறகு அதிமுகவை கைப்பற்றப்போவதாக தெரிவித்த அவர் தொண்டர்களிடம் தொலைபேசியில் பேசிய ஆடியோக்களை வெளியிட்டார். அடுத்து சில தினங்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சிக்கு மனம் திறந்து பேசிய அவர், அடுத்தடுத்து மீடியாக்களுக்கு பேட்டியளிக்கும் திட்டத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. Sasikala Visit ..... Edappadi Upbeat ... It is just the beginning ... The game started at Apollo ..!

இதனை தொடர்ந்து இன்று முதல் சசிகலா தொடர் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ள இருப்பதாகவும் அவரது நெருங்கிய வட்டாரத்தினர் கூறுகின்றனர். அதுவும் எடப்பாடி பழனிசாமி எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் ஜெயலலிதா பயன்படுத்திய காரை எடுத்துக் கொண்டு அதிமுக கட்சியை கட்டிக் கொண்டு சசிகலா கவுண்டர் கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  

Follow Us:
Download App:
  • android
  • ios