சிறையிலுள்ள சின்னமம்மிக்கு  வரும் 18ஆம் தேதி பிறந்த நாள் வரவுள்ள நிலையில், அவர் தற்போது குருப்பெயர்ச்சி உற்சாகத்தில் இருப்பதாக அமமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சொத்துக் குவிப்பு வழக்கில் சின்னமம்மி  சிறைக்குச் சென்று ஒன்றரை வருடங்கள் முடிவடைய இன்னும் மூன்று நாட்களும், எடப்பாடியார்  சீஎம் ஆகி ஒன்றரை வருடங்கள் முடிய நான்கு நாட்களும் உள்ள நிலையில் வரும் 18ஆம் தேதி  சின்னமம்மிக்கு  பிறந்த நாள் வரவுள்ளது.

பிறந்த நாள் வர ஒரு வாரம் உள்ள நிலையில் சிறையில் சின்ன மம்மி  தற்போது எப்படி இருக்கிறார்?  “சின்ன மம்மிக்கு க்கு மீனம் ராசி, ரேவதி நட்சத்திரம். அவருக்கு அக்டோபர் 4ஆம் தேதி குருப்பெயர்ச்சி. 9ஆவது இடத்துக்கு குரு வருகிறார். இதனால் சின்ன மம்மிக்குச் சிறப்பான கால நேரம் கூடி வருகிறது. செல்வாக்கு உயரும். பதவி தேடி வரும். அதே வேளையில் எதிரிகளும் ஒதுங்குவர்”  என அமமுக விழுதுகள்  மார்தட்டி கூறுகிறார்கள்.

ஜெயிலுக்கு போகும் முன் மம்மி  சமாதி மீதி மூன்று முறை அடித்து சத்தியம் செய்துவிட்டு சென்ற சின்னமம்மி, தற்போது அந்த சத்தியத்தை நிறைவேற்ற மும்முரமாகி வருகிறார்.  “தான் வெற்றியடைவதற்காகச் சிறையில் தனது அறையில் முருகன் போட்டோ வைத்து தினமும் 108 அஷ்டோத்திரம் மந்திரம் சொல்லி வருகிறார்.

அதேபோல, நேற்று ஆடி அமாவாசை என்பதால் சிறையில்  துரோகிகளை பழிதீர்க்க பட்டினி இருந்தாராம். தற்போது சின்னமம்மி  செம்ம ஹேப்பியாக  இருக்கிறார். வரும் 18ஆம் தேதி சனிக்கிழமை சின்ன மம்மியின் பிறந்த நாளை முன்னிட்டு அக்ரஹாரா  தோஸ்த்களுக்கு (கைதிகளுக்கு) இனிப்போடு கூடிய மீல்ஸ்  ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறதாம். எப்படியும் மூன்று மாதத்திற்குள் எடப்பாடியார் சர்கார்க்கு  எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும். அதை திமுக கொண்டு வருகிறதா அல்லது அமமுக கொண்டு வருகிறதா என்று தெரியாது. அதில் எடப்பாடியார் ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும்.  மம்மி கட்டிக்காத்த அதிமுக மீண்டும் தியாகத்தலைவி  சின்னமம்மியிடம்  வரும் என்றும் நம்பிக்கையோடு கூறினர் அமமுக விழுதுகள். 

சின்னமம்மி விடுதலையாகும்போது அவரை வரவேற்க இப்போதுள்ள மாண்புமிகுக்களும், எம்.எல்.ஏ சகாக்களும் பெங்களூரு சிறைக்கு    ஓடிவந்து காலில் விழத்தான் போகிறார்கள் என கெத்தாக சொல்கிறார்கள்.