Asianet News TamilAsianet News Tamil

பா.ஜ.க.,வில் இணையும் சசிகலாவின் தோழி... திடீர் முடிவால் டி.டி.வி.தினகரன் அதிர்ச்சி..!

லேடி சூப்பர் ஸ்டார் தெலுங்கானா காங்கிரஸ் கட்சியில் இருந்து  மீண்டும் பாஜகவில் இணைய உள்ளதால் சசிகலா விடுதலையாவதில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது. 
 

Sasikala's girl friend joins BJP
Author
Hyderabad, First Published Sep 28, 2019, 12:26 PM IST

தெலங்கானா காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவராக இருந்து வருகிறார் விஜயசாந்தி. இவர் தசரா பண்டிகைக்கு முன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மராட்டிய சட்டமன்ற தேர்தலில் நட்சத்திர பிரமுகராக பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் கூறப்படுகிறது. Sasikala's girl friend joins BJP

விஜயசாந்தி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர்.  விஜயசாந்தியை பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தி  கட்சியில் இணைக்க தெலுங்கானா மாநில பாஜக தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். ஆனால், டெல்லியில் பாஜக தலைமையை சந்தித்து விஜயசாந்தி கட்சியில் இணைவரா? அல்லது தெலுங்கானாவில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தி  கட்சியில் இணைவாரா? என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் விஜயசாந்தியுடன் கடந்த  15 நாட்களாக கட்சியில் இணைவது பற்றி ஆலோசித்து முடிவு எடுத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.   Sasikala's girl friend joins BJP

1998 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த விஜயசாந்தி, அக்கட்சிக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். பாஜக மகளிர் பிரிவு செயலாளராக இருந்த விஜயசாந்தி 1999 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் கடப்பா மக்களவை தொகுதியில் சோனியா காந்திக்கு எதிராக பாஜக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.  எனினும், சோனியா காந்தி பெல்லாரி தொகுதிக்கு மாறியதால், விஜயசாந்தியும் போட்டியில் இருந்து விலகினார். 

பின்னர், தள்ளி தெலுங்கானா என்ற  தனிக்கட்சி ஆரம்பித்த விஜயசாந்தி, 2009 ஆம் ஆண்டு ராஷ்டிரிய ஜனதா கட்சியுடன் தனது கட்சியை இணைத்துக் கொண்டார். நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த விஜயசந்தி, 2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தற்போது மீண்டும் அவர் பாஜகவில் இணைய உள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரனுக்காக பிரச்சாரம் செய்தார்.

Sasikala's girl friend joins BJP

சசிகலா குடும்பத்தாருடன் நெருக்கமாக இருந்து வருகிறார். சசிகலாவின் தெலங்கானா தோழி என்றே அழைக்கப்படுபவர். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை சில முறை சென்று விஜயசாந்தி சந்தித்துள்ளார். விஜயசாந்தி பாஜகவில் இணைவதால் சசிகலா விவகாரத்தில் தாக்கம் ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios