Asianet News TamilAsianet News Tamil

சசிகலாவின் தீவிர விசுவாசி திடீர் மரணம்... அதிர்ச்சியில் மன்னார்குடி கும்பல்..!

சசிகலா, இளவரசி ஆகியோர் உரிமையாளர்களாக கொண்டதுதான் மிடாஸ் நிறுவனம். ஜெயலலிதா ஆட்சியின்போது மிடாஸ் மதுபான ஆலைக்கு வருமானம் கோடிக்கணக்கில் குவிந்தது. ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுக்கு இந்த மிடாஸ் ஆலையிலிருந்துதான மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. இந்த மதுபான ஆலை காஞ்சிபுரம் அருகே படப்பையில் அமைந்துள்ளது. இந்த ஆலையை மோகன் என்பவர் நிர்வகித்து வந்தார்.. இந்த ஆலையின் நிர்வாகியாக இருந்ததால் அவர், மிடாஸ் மோகன் என்ற பட்டப்பெயர் வந்தது.

Sasikala relative's sudden death
Author
Tamil Nadu, First Published Dec 29, 2019, 12:18 PM IST

சசிகலா குடும்பத்திற்கு நெருக்கமான மிடாஸ் நிறுவன முன்னாள் நிறுவனருமான மிடாஸ் மோகன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இவரது மரணம் மன்னார்குடி தரப்பை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

Sasikala relative's sudden death

சசிகலா, இளவரசி ஆகியோர் உரிமையாளர்களாக கொண்டதுதான் மிடாஸ் நிறுவனம். ஜெயலலிதா ஆட்சியின்போது மிடாஸ் மதுபான ஆலைக்கு வருமானம் கோடிக்கணக்கில் குவிந்தது. ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுக்கு இந்த மிடாஸ் ஆலையிலிருந்துதான மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. இந்த மதுபான ஆலை காஞ்சிபுரம் அருகே படப்பையில் அமைந்துள்ளது. இந்த ஆலையை மோகன் என்பவர் நிர்வகித்து வந்தார்.. இந்த ஆலையின் நிர்வாகியாக இருந்ததால் அவர், மிடாஸ் மோகன் என்ற பட்டப்பெயர் வந்தது. 

Sasikala relative's sudden death

மேலும், பலரும் கூறுவது போல் மிடாஸ் மோகன் சசிகலாவின் உறவினர் இல்லை. இருந்தாலும் சசிகலாவின் கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டார். சசிகலாவுக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரியவர். அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தை, ஜெயலலிதா நீக்கியபோது, மிடாஸ் மோகனும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின் பண மோசடி வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு ஆட்சி அதிகாரங்களில் தலையிடாமல் இருந்து வந்தார். இவர், சென்னை அடையாரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று மதியம், அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இறுதி சடங்கு இன்று நடக்க உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios