Sasikala pushpa slams govt for Thoothukudi
தூத்துக்குடி மக்களை தொட்டால் நடப்பதே வேறு என்று சசிகலா புஷ்பா மிரட்டல் விடுத்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி அப்பாவி பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
காவல்துறையின் கொடூரமான இந்தக் கொலை வெறித் தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், சினிமா பிரபலங்களும் கண்டனக் குரல் கொடுக்கும் நிலையில் எம்பி சசிகலா புஷ்பாவும் கடும் கண்டனம் கொந்தளிதுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தூத்துக்குடியை தொட்டா மக்களை கட்டுப்படுத்த முடியாது. ஆலையை மூடும் வரை சட்டப் போராட்டம் நடத்துவோம். தான் மேயராக இருந்த போது 2013ல் ஸ்டெர்லைட் ஆலையை மூடினேன் என கர்ஜித்த சசிகலா புஷ்பா, அசால்ட்டா 12 பேரை கொன்றுபோட்டுள்ளனர். பெண்கள் உட்பட பேர் கொல்லப்பட்டுள்ளனர். 12 பேரை கொல்ல தைரியம் எப்படி வந்தது? 12 பேரை கொல்ல யார் அனுமதித்தது. ஸ்டெர்லைட்டை இனிமேல் தூத்துக்குடியில் நடத்த முடியாது என கோபமாக தனது கேள்விகளை அடுக்கினார்.

மேலும் பேசிய அவர், துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதி கொடுத்த கலெக்டர், எஸ்பி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ்- ஈபிஎஸ் உத்தரவு கொடுத்தார்களா? கொன்றுவிட்டு பணம் கொடுத்தால் சரியாகிவிடுமா? தூத்துக்குடி மக்களை தொட்டால் நடப்பதே வேறு என்று சசிகலா புஷ்பா மிரட்டல் விடுத்துள்ளார். இவ்வாறு சசிகலா புஷ்பா ஆவேசமாக கொந்தளித்தார்.
