சசிகலா புஷ்பாவின் அடுத்த அதிரடி...! சசிகலாவும் சசிகலா புஷ்பாவும் மீண்டும்..?!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளராக சசிகலா புஷ்வா விரைவில் அறிவிக்கப்படுவார் என  எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது,சமீபத்தில் மறுமணம் செய்துக்கொண்ட சசிகலா புஷ்பா, டிடிவி  தினகரனிடம்,அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொள்கை பரப்பு  செயலாளர் பதவி கேட்டு உள்ளார் சசிகலா புஷ்பா..

தினகரன் என்ன சொன்னார் தெரியுமா ..?

அது சரி...உங்களுக்கு பதவி கொடுப்பதில் எனக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை....ஆனால் பெங்களூரு சென்று, சசிகலா சித்தியையும் ஒரு எட்டு பார்த்துட்டு வாங்க என்று கூறி உள்ளாராம்  தினகரன்.

இதற்கு சசிகலா புஷ்பாவும் ஓகே சொல்லி உள்ளாராம்...அதுமட்டுமின்றி, சசிகலா புஷ்பாவிடம் தினகரன் "முந்தைய கால கட்டத்தில் சில கசப்புணர்வு ஏற்பட்டது...அது பற்றி இப்ப பேச வேண்டிய அவசியம் இல்லை...இப்ப நடக்கும் நிகழ்வையும், வருங்காலத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை போக்கஸ் செய்தாலே போதும் என தினகரன்  தெரிவித்து உள்ளார்.

ஆனால் பெங்களூரு அக்ராஹார சிறையில் இருக்கும் சசி இதுக்கு ஓகே சொல்வாங்களா...?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு, கட்சி பிளவு பட்டது, ops eps எதிர் எதிர் முனையில் இருந்து பனிப்போர் செய்து வந்த நிலையில், சசிகலா ஜெயிலுக்கு போனபின், தினகரனை நைசாக கழற்றிவிட்டார்  எடப்பாடி.

பின்னர் தான் ops eps ஓரணியாக சேர்ந்தனர். இதெல்லாம் ஒரு பக்கம்  இருக்க, அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலளராக தேர்ந்தெடுக்கப்பட்ட  சசிகலா, நிரந்தர பொதுச்செயலாளராக வேண்டிய தருணத்தில் உட்கட்சி  மோதலால் நடக்காமல் போனது.

அதுமட்டுமில்ல தொண்டர்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து தான் அதிமுக பொது செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை  காரணம் காட்டி, உச்சநீதிமன்றம் வரை சென்று போராடினார் சசிகலா  புஷ்பா.இன்னும் சொல்லப்போனால், சசிகலாவின் பொதுச்செயலாளார் ஆசை நிறைவேறாமல் போனதற்கு, புஷ்பாவும் மிக முக்கிய காரணமாக  இருந்தது.

அதே சமயத்தில் டெல்லி மேலிடத்தல்ந சசிகலா புஷ்பாவுக்கு நல்ல   வாய்ஸ் உண்டு...மத்தியில் ஆளும் தேசிய கட்சியிடம் தமிழ் நாட்டு அரசியல்  நிலவரத்தை சும்மா புட்டு புட்டு வைப்பதில் கில்லியாக  இருந்தார்  சசிகலா  புஷ்பா...

இதை எல்லாம் கடந்து, தற்போது சசிகலா புஷ்பா,டிடிவி தினகரனை  அணுகி பதவி கேட்டிருப்பதும், அதற்கு தினகரனும் தலையை ஆட்டியதும்  அரசியல் வட்டாரத்தில் கவனமாக பார்க்கப்படுகிறது.

இருந்தாலும் சசிகலா ஓகே சொன்னால் சசிகலா புஷ்பாவுக்கு பதவி  என்கிறது தினகரன் தரப்பு வட்டாரங்கள்.