சசிகலா நடராஜன் பதவி ஏற்பது என்பது அரசியல் அமைப்புக்கே அவப்பெயர்- சசிகலா புஷ்பா பிரதமருக்கு கடிதம்
சசிகலா நடராஜன் மீது குற்றப் பின்னணி இருப்பதால், அவரை தமிழகத்தின் முதல்வராக தேர்ந்தெடுப்பது கண்டனத்துத்துக்குரியது என அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பா பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில், குற்ற பின்னணியுள்ள சசிகலா நடராஜனை தமிழ்நாட்டின் முதலமைச்சராக தேர்ந்தெடுப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது எனவும், அவர் மீது இருக்கும் அனைத்து குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளதாகவும் குறிபிட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் அவரது குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், சசிகலா நடராஜனை முதல்வரவாக்குவது அரசியல் சட்ட சாசனத்தை மீறும் செயல் எனவும் தெரிவித்துள்ளார்.

சசிகலா நடராஜன் பதவி ஏற்பது என்பது அரசியல் அமைப்புக்கே அவப்பெயரை உண்டாக்கிவிடும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
