Asianet News TamilAsianet News Tamil

சசிகலா புஷ்பா கணவர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்

sasikala pushpa-husband-attacked-zc2rjy
Author
First Published Dec 29, 2016, 12:52 PM IST


சசிகலா புஷ்பாவின் கணவர், அதிமுக தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததால், தொண்டர்கள் தாக்கினர். இதையொட்டி போலீசார் அவரை, மீட்டு அழைத்து சென்றனர்.

இந்நிலையில் தனது கணவர் எங்கே என தெரியாத்தால், சென்னை உயர்நீதிமன்றத்தில் ச்சிகலா புஷ்பா, ஆட்கொண்ர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வரும் நிலையில், ச்சிகலா புஷ்பாவின் கணவரை, போலீசார் சொந்த ஜாமீனில் விட்டுள்ளனர்.

sasikala pushpa-husband-attacked-zc2rjy

சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர திலகர் மற்றும் அவரது வழக்கறிஞர்கள் சூழ மனுத்தாக்கல் செய்ய அதிமுக கட்சி அலுவலகத்துக்கு நேற்று சென்றார். பின்னர் திரும்பி வந்த அவரை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சூழ்ந்து சரமாரியாக தாக்கினர்.
அவர்களை போலீசார் தடுத்து காக்க முயன்றனர். இதில் லிங்கேஸ்வர திலகருக்கு சராமாரியாக அடி விழுந்தது.  பின்னர் போலீசார் அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர். பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு மைலாப்பூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டார். 

இதையறிந்த ச்சிகலா புஷ்பா, தனது கணவர் எங்கே இருக்கிறார் என கூடுதல் டிஜிபி அலுவலகம் வரை கேட்டும் பதில் இல்லை. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். 

sasikala pushpa-husband-attacked-zc2rjy

இதையடுத்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், இன்று காலை 10 மணிக்கு வழக்கை விசாப்பதாக கூறினார்.

இந்நிலையில், ராயப்பேட்டை போலீசார், ஏற்கனவே பதிவு செய்து இருந்த வழக்குகள் அடிப்படையில் லிங்கேஸ்வர திலகத்தை,கைது செய்து பின்னர் சொந்த ஜாமீனில் விடுத்தனர். இதன் மூலம் சசிகலா புஷ்பாவின் ஆட்கொணர்வு மனு முடிவுக்கு வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios