அதிமுக எனும் மிகபெரிய கட்சியின் மிகபெரிய பொறுப்பான பொது செயலாளர் பதவி காலியாக உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதற்கு கடந்த 20 நாட்களாக முன்மொழிந்தும் வழிமொழிந்தும் வரப்பட்ட ஒரே பெயர் சின்னம்மா எனப்படும் சசிகலா மட்டும்தான்.

அதில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நாடளுமன்ற மாநிலங்களவை எம்பியான சசிகலா புஷ்பா காய் நகார்த்த தொடங்கியிருக்கிறார்.

சின்னம்மா சசிகலா பொது செயலராக அவதற்கு தடை கேட்டு நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சசிகலா புஷ்பா

இந்த நிலையில் சசிகலா புஷ்பா சார்பில் விருப்ப மனு கொடுக்க வந்த அவரது கணவர் லிங்கேஸ்வரனை அடி அடி என அடித்து துவைத்து விட்டனர் அங்கிருந்த சிலர்.

பின்னர் அவரை காப்பாற்றி கூட்டி சென்ற போலீசார் அடி வாங்கி ரத்தம் சொட்ட சொட்ட அழைத்து செல்லப்பட்ட லிங்கேஸ்வரன் தற்போது எங்கே இருக்கிறார் என தெரியாமல் அவரது உறவினர்களும் நிருபர்களும் அல்லாடி வருகின்றனர்.

சம்பவம் நடந்த ராயபேட்டை காவல் நிலையத்தில் வைத்தால் பிரச்சனை மேலும் வலுக்கும் என்பதால் மருத்துவமனையில் சேர்த்து ரத்த காயத்திற்கு சிகிச்சை கொடுக்கப்பட்ட பின்னர் தற்போது அவரை மைலாப்பூர் காவல் நிலையத்தில் வைத்திருப்பதாக தெரிகிறது.

அடிவாங்கிய சசிகலா புஷ்பாவின் கணவர் அளிக்கும் புகார் ஏற்றுக்கொள்ளப்படுமா? அல்லது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தார் என இவர் மீதே கேஸ் போடப்படுமா என்பது சில மணி நேரங்களில் தெரிய வரும்.