Asianet News TamilAsianet News Tamil

சசிகலா அரசியல் வருகை அதிமுக, பாஜகவுக்கும் ஆபத்தாக முடியும்.. அவரது உடல்நிலை பின்னணியில் சதி -ஜவாஹிருல்லா.

சசிகலா அரசியல் வருகை அதிமுக, பாஜகவுக்கும் ஆபத்தாக முடியும் என கருதிய நிலையில் அவரது உடல்நிலை மோசமானதற்கு பின்னணியில் ஒரு சதி இருக்கலாம் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். 

Sasikala political entry could be dangerous for AIADMK and BJP. Conspiracy- in his health background. Jawahirulla
Author
Chennai, First Published Jan 22, 2021, 10:32 AM IST

சசிகலா அரசியல் வருகை அதிமுக, பாஜகவுக்கும் ஆபத்தாக முடியும் என கருதிய நிலையில் அவரது உடல்நிலை மோசமானதற்கு பின்னணியில் ஒரு சதி இருக்கலாம் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.  

மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தென்கிழக்கு மண்டல பொதுக்குழு மாநாடு நடைபெற்றது. இதில் மனித நேய மக்கள் கட்சி மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமையில் பொதுக்குழு மாநாடு நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:  மதுரை மாநகராட்சி ஒரு மிக முக்கியமான நகரம் அதிகமான சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வரக்கூடிய மதுரை மாநகர் அதனுடைய அவலநிலையை எடப்பாடி பழனிச்சாமி அரசு எந்த அளவுக்கு ஒரு திறமையற்ற அரசாக மக்களுடைய நலனில் அக்கறையில்லாத அரசாங்கமாக இருக்கின்றது என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறது. 

Sasikala political entry could be dangerous for AIADMK and BJP. Conspiracy- in his health background. Jawahirulla

இதேபோன்றுதான் தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அமல் படுத்துவதற்கான ஒவ்வொரு நகரத்திற்கும் தலைமை செயல் அலுவலர்கள் இல்லாத ஒரு அவல நிலையை நாம் பார்க்கின்றோம். மத்திய அரசு கொண்டு வரக்கூடிய பல்வேறு திட்டங்கள் எல்லாம் மற்றவர்களுக்கு கேடு செய்யக்கூடிய வகையிலே இருக்கின்றது. இந்த நாட்டினுடைய அரசு மோடி அரசு எந்த அளவுக்கு கார்ப்ரேட்டுக்கு இசைவாக செயல்படுகின்றது என்பதற்கு இவையெல்லாம் எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. தொடர்ச்சியாக தமிழகத்தினுடைய உரிமைகளை எல்லாம் பறிக்கக் கூடிய வகையிலே தான் எடப்பாடி பழனிச்சாமி அரசு செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மாறினால் தான் தமிழகத்தினுடைய உரிமை வழக்கமாக இருக்கக்கூடிய மாநில சுயாட்சி, சமூக நல்லிணக்கம், சமூக நீதி இந்த மூன்றையும் நிலைநாட்ட முடியும். 

Sasikala political entry could be dangerous for AIADMK and BJP. Conspiracy- in his health background. Jawahirulla

திருமதி சசிகலா நடராஜன் அவர்கள் உடல் நிலை குறித்த செய்தி ஐயத்தை எழுப்புகிறது. அவர் பரிபூரணமாக குணமடைந்து அவர் விடுதலையாக வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமாக இருக்கின்றது. ஆனால் பரவலாக அவருடைய அரசியல் வருகை யாருக்கு ஆபத்தாக முடியும் என்றால் பாஜகாவுக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் ஆபத்தாக முடிய கூடியதாக அவர்கள் கருதுகிறார்கள். எனவே இதனை ஒரு சதி இருப்பது போல ஒரு சந்தேகம் வலுவாக எழுகின்றன. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் அதிமுக அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்க வில்லை, மோடி அரசுடன் கூட்டுச் சதி செய்து வருகின்றார் என்பதுதான் எதார்த்தமான ஒரு சூழலாக இருக்கின்றது. தமிழக இளைஞர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்புகள் அனைத்தும் பறி போயிருக்கக் கூடிய ஒருசூழலை பார்க்கின்றோம். 

Sasikala political entry could be dangerous for AIADMK and BJP. Conspiracy- in his health background. Jawahirulla

எனவே நாங்கள் வேலை வாய்ப்புகளை தமிழக மக்களுக்கு உருவாக்கி இருக்கிறோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சொல்வது உண்மைக்குப் புறம்பானதாக இருக்கின்றது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி மிகப் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும்.மாநில மக்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் .இந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இழந்துவிட்ட பல்வேறு உரிமைகள் எல்லாம் மீட்கப்பட வேண்டும் எங்களுடைய அணி வெற்றி பெறும். கூட்டணி மற்றும் தொகுதிகள் குறித்து தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு பேச்சுவார்த்தை நடைபெறும். இவ்வாறு அவர் பேசினார். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios