அ.தி.மு.க. தலைமை கழகத்தில் உள்ள சசிகலா புகைப்படங்களை அகற்ற வேண்டும் என மதுசூதனன் கோரிக்கையை ஏற்க முடியாது என எடப்பாடி தரப்பு ஆதரவாளர் திண்டுக்கல் சீனிவாசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் பிரிந்து கிடந்த இரு அணிகளும் ஒன்று சேர பேச்சுவார்த்தை என்ற நிலையை எட்டியுள்ளது. 
பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் ஆனால் இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் ஒ.பி.எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதில் சசிகலாவை முழுமையாக கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்த பட்டது.
அதற்கு எடப்பாடி தரப்பில் முதலில் பேச்சுவார்த்தைக்கு வரட்டும். பின்பு முடிவு தெரிவிக்கப்படும் என கூறி வருகின்றனர் அமைச்சர்கள்.
இவ்வாறு முரண்பட்ட கருத்துகளால் பேச்சுவார்த்தை தள்ளி கொண்டே போகிறது.
இதைதொடர்ந்து இன்று சசிகலாவின் புகைப்படங்களை அ.தி.மு.க. அலுவலகமான தலைமைக் கழகத்திலிருந்து உடனே அகற்றி அதன் புனிதத்தை காப்பாற்ற வேண்டும் ஒ.பி.எஸ் தரப்பு ஆதரவாளர் மதுசூதனன் அறிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், அ.தி.மு.க. தலைமை கழகத்தில் உள்ள சசிகலா புகைப்படங்களை அகற்ற வேண்டும் என மதுசூதனன் கோரிக்கையை ஏற்க முடியாது என எடப்பாடி தரப்பு ஆதரவாளர் திண்டுக்கல் சீனிவாசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்கள் முதலில் பேச்சுவார்த்தைக்கு வரட்டும். பிறகு முடிவு எடுக்கப்படும்.
பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தும் அவர்கள் வரவில்லை என தெரிவித்துள்ளார்.