முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை காமராஜர் சாலை, மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகள் அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அதிமுகவினரும், இன்று காலை முதல் மெரினா கடற்கரைக்கு சென்று, அங்குள்ள எம்ஜிஆர் நினைவிடத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதை தொடர்ந்து சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டில், அவரது தோழி சசிகலா, எம்ஜிஆர் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னை கோயம்பேட்டில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் எம்ஜிஆர் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.