சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்படுள்ள சசிகலா, ஆர்கே நகரில் போட்டியிடுவது பாதுகாப்பில்லை என்ற முடிவால், ஆண்டிப்பட்டி அல்லது திருமங்கலத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

அதிமுக பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா, முதலமைச்சர் ஆவார் என கூறப்பட்டு வந்தது. இதற்கு கட்சி தொண்டர்கள் மற்றும்பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி இருந்தது.

இதில் உளவு துறை வாயிலாக, அறிந்த சசிகலா தரப்பினர், முதலமைச்சராகும் எண்ணத்தை தள்ளி வைத்தனர். இதற்கிடையில் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தனிப்பட்ட முறையில் செல்வாக்கு அடைந்து வருவதும், திமுக போன்ற கட்சிகள் அவருடன் நெருக்கமாகி வருவதும், ச்சிகலா தரப்பில் கலக்கத்தை ஏற்படுத்தியது.

மத்தியில் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு தரும் முக்கியத்துவம், அவரை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை கட்சி மேலிடத்தில் ஏற்படுத்தியது. இதையடுத்து, இன்று கூடிய எம்எல்ஏக்கள் கூட்டத்தில், சட்டமன்ற குழு தலைவராக ஒ.பி.எஸ். வாயாலேயே ச்சிகலாவை முன் மொழிய வைத்து ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இன்னும் சில நாட்களில் முதலமைச்சராக பதவியேற்க உள்ள சசிகலா, 6 மாத்த்துக்குள் தேர்தலில் போட்டியிட வேண்டும்.

தற்போது உள்ள சூழ்நிலையில், ஏற்கனவே ஜெயல்லிதா போட்டியிட ஆர்கே நகர் தொகுதி காலியாக இருக்கிறது. அதில் போட்டியிடுவார் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், ஆர்கே நகரில், ச்சிகலாவுக்கு எதிராக அதிருப்தி நிலவுவதும், தீபாவுக்கு கிடைக்கும் அபிரிதமான ஆதரவும், ச்சிகலா தரப்பை யோசிக்க வைத்துள்ளது.

போட்டியிட்ட்டால், ஒருவேளை தோல்வியை தழுவுவோமோ என்ற எண்ணத்தின் காரணமாக ஆய்ய்ய்யோ ஆர்கே ந என முடிவெடுத்துள்ளார்.

ஆண்டிப்பட்டி அல்லது திருமங்கலத்தில் போட்டியிடலாம் என்ற முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இவை இரண்டும் அதிமுகவின் கோட்டை என்பதாலும், தேவர் சமுதாய வாக்குகள் அதிகம் உள்ள தொகுதி என்பதாலும், அவர் இங்கு நிற்கும் முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு ஏதுவாக அந்த தொகுதி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.