முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமான பிறகு, அதிமுக பொது செயலாளர் பதவி காலியாக இருந்தது. இந்த பதவியை பொறுப்பேற்கும்படி அதிமுக அமைச்சர்கள், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை வலியுறுத்தி வந்தனர். இதை தொடர்ந்து, இன்று காலை அதிமுக செயற்குழு கூட்டம் நடந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதில், விருதுநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திர பாலாஜி, விழுப்புரம் மாவட்ட செயலாளர் குமரகுரு, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன், கிரிஷ்ணகிரி மாவட்ட செயலாளர் வி.கோவிந்தராஜ், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பாப்புலர் வி.முத்தையா ஆகியோர், ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை அதிமுக பொது செயலாளராக முன் மொழிந்தனர்.

மேலும்,

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,அமைச்சர் S.P வேலுமணி ஆகியோர் சசிகலா பொதுசெயலாளராக முன் மொழிந்தனர்