சசிகலா தலைமையின் கீழ் பணியாற்ற அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

மிகவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக பொதுக் குழு கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீவாரி வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

கூட்டம் தொடங்கியதும் ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்ணீர் மல்க, ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை வாசித்தார்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தலைமையின் கீழ் விசுவாசத்துடன் பணியாற்ற உறுதிமொழி ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மொத்தம் 14 தீர்மானங்கள் இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இதை தொடர்ந்து வரும் ஜனவரி 2ம் தேதி சசிகலா அதிமுக பொது செயலாளராக பொறுப்பேற்கிறார் என தெரியவந்துள்ளது.
