sasikala never met jayalalitha after oct

அக்டோபர் 1 க்கு பிறகு "ஜெ" வை "சசி" பார்க்கவே இல்லை- தினகரன் தடாலடி 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இறப்பிற்கு பின் தமிழக அரசியல் ஆட்டம் கண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இதுவை அம்மாவின் இறப்பிற்கு என்னதான் காரணம் என இதுவரை சரியான விளக்கம் இல்லை.இருந்தபோதிலும் , அம்மா மருத்துவமனையில் இருந்த போது அவர் நலமாக உள்ளார் நாங்கள் நேரில் பார்த்தோம், இட்லி சாப்பிட்டார் தண்ணீர் குடித்தார் என பலரும் வாய் வசனம் பேசி வந்தனர். 

அதுமட்டுமல்லாமல், இவர்கள் தான் இப்படி பேசினார்கள் என்றால், அருண்ஜெட்லி முதல் ராகுல் காந்தி வரை அனைவருமே பொய் தான் சொன்னார்களா என சந்தேகம் எழும் அளவிற்கு தற்போது திண்டுக்கல் சீனிவாசன் அனைத்தையும் மனம் திறத்துவிட்டார்.

அதாவது , நீதி விசாரணை அமைத்து அம்மாவின் இறப்பு குறித்த உண்மை வெளிவரும் தருவாயில், முதலில் மாட்டிக்கொள்வது சீனிவாசன் தான் என்ற நிலை உருவாகி உள்ளது. ஏனென்றால் இவரின் கூவல் தான் அதிகம் இருந்தது.இது ஒரு பக்கம் இருக்க... சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த மாதிரி, தினகரன் தரப்பிலிருந்து சீனிவாசன் தான் மாட்டிக்கொள்வார் என சொல்லிக்கொண்டே இருக்க, ஐயோ சாமி எப்படியாவது தப்பித்தால் போதும் என நினைத்த திண்டுக்கல் சீனிவாசன் தற்போது உண்மையை டமார் என போட்டு உடைத்தார். 

அவர் பேசும் போது, என்னை மன்னித்து விடுங்கள், அம்மாவை பற்றி நாங்கள் சொன்னது எல்லாமே பொய். நான் மட்டும் இல்லை , ராஜ் நாத் சிங் முதல் ராகுல் காந்தி வரை யாருமே அம்மாவை பார்க்க வில்லை என்பது தான் உண்மை .. நாங்கள் அனைவருமே , மருத்துவமனைக்குள் சென்றாலும், வெளியில் போடபட்டிருக்கும் இருக்கையில் கை கட்டிதான் அமர்ந்தோமே தவிர .. சத்தியமா அம்மாவை பார்க்கவே இல்லை என உண்மையை போட்டு உடைத்தார் திண்டுக்கல் சீனிவாசன் .

இவருக்கு தினகரன் பதிலடி கொடுக்கும் வகையில், சீனிவாசன் பதவி ஆசையில் என்னென்னமோ பேசுவார், பதவி மீதுள்ள ஆசையால் அவருக்கே புரியவில்லை தான் என பேசுகிறோம் என என்று தெரிவித்தார். மேலும் சசிகலா அவர்கள் அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு மேல், மருத்துவமனையில் இருந்த அம்மாவை பார்க்கவே இல்லை என தடாலடியாக தெரிவித்துள்ளார். 
மேலும் அவரிடம் சிசிடிவி பதிவு கூட இருப்பதாக சொல்லி இருக்கிறார் தினகரன். முன்பெல்லாம் கேட்கும் போது சிசிடிவி பதிவு இல்லை என கூறப்பட்டது.இந்நிலையில் தினகரன் இது போன்ற கருத்துக்களை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது