சொத்து குவிப்பு வழக்கின் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்ற நீதிபதி பினாக்கி சந்திரகோஷ் உறுதியாக தெரிவித்துவிட்டார்.

கர்நாடக அரசு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே கொடுத்த தொடர் அழுத்தத்தின் காரணமாக தீர்ப்பு விரைவாக வழங்கப்படுகிறது.

மேல் முறையீடு செய்து நீண்ட நாட்கள் ஆகியும் தீர்ப்பு வழங்கப்படாததால் உடனடியாக தீர்ப்பு வழங்கப்படும் என கர்நாடக தரப்பு வழக்கறிஞர் கேட்டு கொண்டதின் பேரில் நீதிபதி பினாக்கி சந்திரகோஷ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில் கர்நாடக அரசு கேட்டு கொண்டதால் இதை தெரிவிக்கிறேன் தீர்ப்பு ஏற்கெனவே எழுதப்பட்டு விட்டது இன்னும் ஒரு வர காலத்துக்குள் தீர்ப்பு அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

இச்செய்தி வெளியானவுடன் அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் தலைமை என அனைத்து தரப்பும் பரபரப்புக்குள்ளாகியுள்ளது.

காரணம் 9 ஆம் தேதி சசிகலா முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

தீர்ப்பு எப்படி இருக்குமோ என்ற ஒரு பரபரப்பு அதிமுகவின் அனைத்து மட்டத்திலும் உள்ளது.

இந்த நிலையில் அதிமுக டெல்லி விவகாரங்களை கவனிக்கும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையுடன் சசிகலா திடீர் ஆலோசோனை மேற்கொண்டுள்ளார்.

தீர்ப்பு எப்படி இருக்கும் தீர்ப்பு சாதகமாக வந்தால் என்ன செய்வது? வேறு மாதிரி இருந்தால் எப்படி கையாள்வது? என்பது பற்றி எல்லாம் தம்பிதுரையுடன் சசிகலா ஆலோசனை செய்வதாக கூறப்படுகிறது.