அதிமுக நிர்வாகிகளுடன் சசிகலா ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

கடந்த டிசம்பர் 5ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார். இதையடுத்து ஒ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக பதவியேற்று கொண்டார். பின்னர், ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுக பொது செயலாளராக பொறுப்பேற்று கொண்டார்.

இதைத் தொடர்ந்து சசிகலா, மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து, கட்சியின் பணிகள் குறித்து அலோசனைகளை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளுடன், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமக தலைமை அலுவலகத்தில் நடக்கிறது. இதில், பொது செயலாளர் சசிகலா கலந்து கொண்டு, பல்வேறு முக்கிய ஆலோசனைகளை வழங்க உள்ளார்.