Asianet News TamilAsianet News Tamil

சசிகலா நிரபராதி... ஜெ., அம்மாவை எப்படி பார்த்துக் கொண்டார் தெரியுமா..? அதிமுக அமைச்சர் அதிரடி பல்டி..!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீது எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Sasikala is innocent ... J., do you know how he looked after his mother ..? AIADMK Minister in action ..!
Author
Tamil Nadu, First Published Mar 25, 2021, 3:23 PM IST

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீது எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டியில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்கஇடம் பேசுகையில், “ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீது நாங்கள் வீண் பழி சுமத்தவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இயற்கையான முறையிலேயே மரணம் அடைந்தார். அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் அவர் இறக்கும் நிலை உண்டானது.Sasikala is innocent ... J., do you know how he looked after his mother ..? AIADMK Minister in action ..!

இதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அன்று முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், சசிகலா பற்றி கூறிய கருத்து சரியானதுதான். இயற்கையை யாரும் வெல்ல முடியாது. ஆனாலும் சசிகலா மீது பழி சுமத்தப்பட்டது. ஜெயலலிதா இறந்த பிறகு பல விமர்சனங்கள் உண்டானது. வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அப்போதைய முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கமிஷன் அமைக்கப்பட வேண்டும் எனக் கூறினார்.Sasikala is innocent ... J., do you know how he looked after his mother ..? AIADMK Minister in action ..!

முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தொண்டர்கள் என யார் மீதும் வீண் பழி சுமத்தப்படவில்லை. சசிகலா, ஜெயலலிதா உடன் இருந்து அவரை கவனித்துக் கொண்டார். அதில் யாருக்கும் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. இதையேதான் ஓ.பி.எஸ் சொல்லியுள்ளார். அதிமுகவில் சசிகலா இணைவது குறித்து முதல்வரும், துணை முதல்வரும் தான் முடிவெடுக்க வேண்டும்.Sasikala is innocent ... J., do you know how he looked after his mother ..? AIADMK Minister in action ..!

அதிமுக அரசு மீது எதிர்க்கட்சிகள் சொல்லும் குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது. எதிர்க்கட்சிகள் எப்போதும் குற்றம் சொல்ல தான் செய்வார்கள். அவர்கள் பாராட்டுப் பத்திரம் வழங்க மாட்டார்கள். ஸ்டெர்லைட் ஆலையை திறந்தது திமுக. ஆனால், தற்போது ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை தூண்டிவிட்டு மக்களை பலி வாங்கியதும் திமுகதான். நான் பணம் வாங்கி வைத்திருப்பதாக ஸ்டாலின் கூறுகிறார். அதை அவர் நிரூபிக்க வேண்டும் ? தமிழகத்தில் குறைவான சொத்துமதிப்பு உள்ள வேட்பாளர் நான்தான்” எனத் தெரிவித்தார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios