1990 க்கு பிறகு கணவன் மனைவி என பெயருக்குத்தான் இருந்தார்களே தவிர தனித்தனியாக வாழ்ந்து வந்தனர் சசிகலாவும் நடராஜனும்.

சுமார் 27 ஆண்டுகள் கழித்து கணவன் என்ற உரிமையோடு கட்டியணைத்து கதறியிருக்கிறார் சசிகலா.

சசிகலா இளவரசி சுதாகரன் மூன்று பேரும் குற்றவாளிகள் என சொத்துகுவிப்பு இறுதி தீர்ப்பில் அறிவிக்கப்பட்டதால் நீதிபதி முன் சரண் அடைவதற்காக சென்றனர்.

சென்னையில் இருந்து தங்க நாற்கர சாலை வழியாக காஞ்சிபுரம், ராணிபேட்டை, வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக கர்நாடக எல்லையில் உள்ள அத்திபள்ளிக்கு சென்று அங்கிருந்து பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்றனர்.

சிறைச்சாலைக்கு எதிரே அமைந்துள்ள நீதிமன்றத்திற்கு சென்றடைவதற்கு முன்னதாகவே சசிகலாவின் கணவர் நடராஜன் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை காத்திருந்தனர்.

கடந்த ஒரு வார காலமாகவே உடல்நிலை மிகவும் பாதிக்கபட்டிருந்த நடராஜன் 4 நாட்களுக்கு முன்புதான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வெளியே வந்திருந்தார்.

உடல்நிலை பாதிக்கபட்டிருந்த நிலையில் நடராஜன் மிகவும் சோர்வுடன் இருந்தார். தம்பிதுரையுடன் அரசு காரில் வந்த நடராஜன் நீண்ட நேரமாக சம்பிரதாயங்கள் முடியும் வரை காத்திருந்தார்.

நீதிபதி முன் சரண் அடைந்த சசிகலா இளவரசி ஆகியோர் ஜெயிலுக்குள் கொண்டு செல்லப்பட்டனர். அப்போது அங்கு வந்த நடராஜனை கண்டதும் சசிகலா கட்டிபிடித்து கதறி அழுதார்.

இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர்தான் சசிகலா கட்டி அனைத்து கதறி அழுதவர் அவரது கணவர் நடராஜன் என்பது தெரியவந்தது.

பின்னர் இருவரும் உருக்கமாக பேசி கொண்டிருந்தனர். 15 நிமிட நேரம் நடராஜன் மற்றும் குடும்பத்தினருடன் பேசி கொண்டிருந்தார். பின்னர் கர்நாடக காவல் துறையினர் நேரம் அதிகமாகிவிட்டது என கூறி ஜெயிலுக்குள் அழைத்து சென்றனர்.