அதிமுகவில் தங்களது ஸ்லீப்பர் செல்கள் பலர் இருப்பாதாக டி.டி.வி.தினகரன் அணியினர் அதிரடி காட்டி வந்தனர். இப்போது ஓர் அமைச்சரே ஸ்லீப்பர் செல்லாக இருப்பது பேரிடியை இறக்கி உள்ளது. 

அதிமுகவில் இருக்கும் பலரும் குறுக்கு வழியில் பதவியை பிடிக்க நாடிய இடம் சசிகலா அண்ட் கோ. அவர்களைத் தாண்டி பதவியோ, சீட்டோ பெறமுடியாது. அப்படிப் பதவிக்கு வந்த பலரும் இப்போது அதிமுகவில் இருந்தாலும் ஒரு ஓரத்தில் சசிகலா குடும்பத்தினர் மீது பாசத்தால் ஈரம் கசிந்துருகி கொண்டே இருக்கும். 
அப்படிப்பட்டவர்களில் ஒருவர் கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி. பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா அடிக்கடி உடல் நலக்குறைவால் அவதிப்படுகிறாராம். உடனிருக்கும் இளவரசிக்கும் ஜெயில் வாழ்க்கை ஒத்துப் போகவில்லை.

இவர்கள் இருவருக்கும் தேவையான மருத்துவ உதவிகள் உள்ளிட்டவற்றை பார்டரில் இருக்கும் கிருஷ்ணகிரி தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியே முன்னின்று கவனித்துக் கொள்கிறாராம். சரியாக தமிழ்கூட பேசத் தெரியாத அவரை அமைச்சரவையில் அமர வைத்ததே சசிகலா தான். அந்த நன்றிக்கடனுக்காக தனது ஆட்கள் மூலமாக சசிகலா தரப்புக்கு இப்படி ‘ஸ்லீப்பர் செல்’ வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாராம் அந்த அமைச்சர். இந்தத் தகவல் வெளியாகி அதிமுக வட்டாரத்தில் ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.