sasikala family joining due to jai anand marriage
துக்க காரியம் நடந்த வீட்டில் உடனே சுமங்கல நிகழ்ச்சியை நடத்தனும் என்ற சொல்லாடல் தமிழகத்தில் வழக்கத்தில் உண்டு. ஆம் போயஸ் கார்டன் வீட்டில் மீண்டும் ஒரு சுப நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. ஆம் சசிகலா குடும்பத்தில் மீண்டும் ஒரு திருமணம். சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெய் ஆனந்தே மாப்பிள்ளை. ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்பே ஜெய் ஆனந்துக்கு பெண் பார்க்கும் படலத்தை திவாகரன் தொடங்கினாராம்…
ஆனால் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு பெண் பார்க்கும் படலத்தை தற்காலிகாமாக திவாகரன் தள்ளிப் போட்டுள்ளார். இதற்கிடையே துக்க காரியம் நடத்த வீட்டில் சீக்கிரமா ஒரு சுப நிகழ்ச்சியை நடத்திடுங்க, அதான் குடும்பத்திற்கு நல்லது என்று ஜோதிடர் அறிவுரை கூற, மீண்டும் பெண் பார்க்கும் படலம் தொடங்கப்பட்டது.

தனக்கு பெண் பார்க்கிறார்கள் என்று அரசல் புரசலாக ஜெய் ஆனந்துக்கு செய்தி கசிய, நீண்ட நெடிய தயக்கத்திற்குப் பின் தந்தையிடம் முன் சென்று, அப்பா உங்ககிட்ட ஒன்னு சொல்லனும் என்று நின்றுள்ளார். எதுக்குமே தயங்காத ஜெய் இம்முறை தலைகுணிந்து நிற்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த திவாகரன் என்னவென்று கேட்க, நான் ஒருபொண்ணு பார்த்திருக்கேன். அதையே பேசி முடிச்சிடுங்க...’ என்று தயங்கியபடியே சொல்லி இருக்கிறார் ஜெய் ஆனந்த்.
ஒருபக்கம் அதிர்ச்சியளித்தாலும், அதனை வெளிக்காட்டாமல் நிமிர்ந்த திவாரகன், பொண்ணு யாரு சாமி என கேட்டிருக்கிறார் திவாரகரன். லவ் மேட்டர முதலில் சொல்லத் தயங்கிய ஜெய் ஆனந்த் இம்முறை தயக்கமில்லாமல், வேறு யாரும் இல்லப்பா, நம்ம பாஸ்கர் மாமா பொண்ணு தான் என்று முடித்திருக்கிறார்.
யார் இந்த பாஸ் என்கிற பாஸ்கரன்
டிடிவி.தினகரனின் தம்பி என்பதை விட நடிகராகவே பலரால் அறியப்பட்டவர். சாலையோரங்களில் இருக்கும் சுவர்களில் இவர் நடித்த, நடித்து வரும் திரைப்படங்களின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கும். சென்னையில் தான் போஸ்டர் கலாச்சாரம் அதிகமாச்சே. விட்டு விடுவார்களா? பாஸ்கரனின் ஆதரவாளர்கள்.. சாம் ஆன்டர்சன் பாட்டால் பிரபலமானார். பாஸ்கரன் போஸ்டரால் பரிட்சயமானவர். சினிமா மட்டுமே இவருக்கான அடையாளம் அல்ல. பெரா வழக்கு விசாரணையிலும் அவ்வப்போது ஆஜராகி மீடியாக்களால் செய்தியாக்கப்பட்டவர். பாஸ்கரன், பாஸ் என்றும் அழைக்கப்படுபவர்.
ஜெய் ஆனந்த் விரும்பப்பட்ட பாஸ்கரனின் மகள் தற்போது மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறார். ஆடு சண்டை குட்டி உறவு என்பதைப் போல இருவருக்கும் இடையே ஆரம்பித்த நட்பு, காலப் போக்கில் காதலாக கசிந்து உருகியிருக்கிறது.

தினகரனுக்கும், திவாகரனுக்கும் இடையே பிணக்கும் பிளவும் உண்டு என்பது தமிழ்நாட்டுக்கே தெரிந்து ஒன்று தான். இருப்பினும் மனசங்கடங்களை எல்லாம் தமையனுக்காக உதறித் தள்ளிய திவாகரன், நேராக பாஸ்கரன் வீட்டுக்கே சென்று பெண் கேட்டுவிட்டாராம். ஆரம்பத்தில் அதிர்ந்த பாஸ்கரனோ, திவாகரனே இறங்கி வந்து பேசியிருப்பதால் மனம் குளிர்ந்து கல்யாணத்திற்கு கிரீன் சிக்னல் காட்டியிருக்கிறார். கூடவே அண்ணன் தினகரனுக்கும் போன் செய்து சேதி சொல்ல, ஆனந்தப் பட்டிருக்கிறார் தினகரன்.
நமக்குள்ள ஆயிரத்தெட்டு மனசங்கடங்கள் இருந்தாலும், சொந்தம் விட்டுப் போகக் கூடாதுனு நீங்க முடிவு செய்திருப்பது எனக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு. கல்யாணத்தா ஜாம் ஜாம்னு பன்னிடலாம்னு சொல்லியிருக்கிறார் முக மலர்ச்சியோடு. இதனைத் தொடர்ந்து பாஸ்கரன் வீட்டில் வைத்து இரு வீட்டாரும் வெற்றிலை பாக்கு மாற்றியிருக்கிறார்கள். இரு மனம் கலக்கும் இந்த திருமண வைபவம் குறித்து சசிகலாவிடமும், டிடிவி தினகரன் பேசினாராம்.
‘நீங்க எல்லோரும் ஒற்றுமையா இருந்தா அதுவே எனக்குப் போதும். நல்லபடியா செய்யுங்க..’ என சசிகலாவும் சந்தோஷப்பட்டு ஆசி வழங்கியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து திருமண தேதியை இறுதி செய்வதில் முழு மூச்சாக இறங்கியுள்ள திவாகரன் மற்றும் தினகரன் ஆகியோர், திருமண வைபவத்தில் சசிகலா பங்கெடுக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனராம். சசிகலாவை பரோலில் எடுக்க டெல்லியில் உள்ள மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
மன்னிக்கவே முடியாத மனசங்கடங்ளையும் காதல் மறக்கச் செய்யும் என்பது ஜெய் ஆனந்தின் விஷயத்தில் உறுதியாகி விட்டது.

மன்னார் குடி உறவுகள் ஒன்று சேர்ந்தது எடப்பாடியை கலங்கடித்துள்ளதாம், அதிமுக எம்எல்ஏக்கள் மத்தியிலும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஒரு கூட்டம், தற்போது எடப்பாடியிடம் உள்ள எம்எல்ஏக்கள் அனைவரும் திவாகரன் தலைமையிலான ஒரு கூட்டம் என்று பிரிந்தது.
தினகரன் எப்போது வீழ்வார் என்று காத்திருந்தது திவாகரனின் உறவினர் கூட்டம் அதுக்கு ஏற்றார்போல இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்படப்பட்டார். இதனை வெடிவெடித்து திவாகரன் ஆதரவாளர்கள் கொண்டாடினர். இந்த இருவரும் ஒருவரை ஒருவர் எப்போது அழிப்பது என்று காத்திருந்த நிலையில் மாந்தர்குடி உறவுகள் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது எடப்பாடியாரை கலங்க வைத்துள்ளதாம்.
