Asianet News TamilAsianet News Tamil

கண் கலங்கி பேசமுடியாமல் தவித்து அழுத சசிகலா

sasikala crying-stage
Author
First Published Dec 31, 2016, 2:17 PM IST


சசிகலா தனது பேச்சில், ஜெயலலிதாவை பற்றி குறிப்பிடும்போதெல்லாம் கண் கலங்கி பேச முடியாமல் தவித்தார்.

அதிமுக பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா, முறைப்படி இன்று கட்சி தலைமை அலுவலகத்துக்கு பொறுப்பேற்க வந்தார். அவரை ஏராளமான கட்சி தொண்டர்கள், திரண்டு இருந்து வரவேற்றனர்.

முதலில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த சசிகலா, பின்னர் அலுவலகத்துக்குள் சென்று எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை வணங்கிவிட்டு, ஜெயலலிதா இருக்கையில் அமர்ந்தார். பின்னர், பொது செயலாளராக பதவியேற்கும் ஆவணத்தில் கையெழுத்திட்டார்.

நிர்வாகிகள் வாழ்த்துகளை பெற்று கொண்டு வெளியே வந்த அவர், முதன் முறையாக தொண்டர்கள் இடையே உரையாற்றினார். தனது உரையை துவக்கும் முன்னர், ஜெயலலிதாவுடன் தான், நெருக்கமாக இருந்தததை குறிப்பிட்டு பேசினார்.

எனக்கு எல்லாமே  அம்மாதான் என பேசியபேது, கண் கலங்கினார். பின்னர், கட்சியை பற்றி பேசும்போது, ஜெயலலிதாவை பிரிந்து இருந்த காலங்களை குறிப்பிட்டு பேசும்போது கண்கலங்கி பேச முடியாமல் தவித்தார். உறுதியாக தெளிவாக எழுதி வைத்த உரையை படித்த சசிகலா, ஆங்காங்கே தனது உரையில் ஜெயலலிதாவை நினைத்து கண் கலங்கி தொட ர முடியாமல் நிறுத்தினார்.

எனக்கு எல்லமுமாக இருந்த ஜெயலலிதா, இன்று இல்லை என்று கூறியபோது, அடுத்த வார்த்தை பேசமுடியாமல், நின்றார். அப்போது தொண்டர்கள், உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என குரல் கொடுத்தனர். பின்னர், ஒரு வழியாக சமாளித்து கொண்டு சசிகலா தனது உரையை தொடர்ந்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios