நான்கு ஆண்டுகள் இந்த ஆட்சி நீடிப்பது முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் கைகளில்தான் உள்ளது… திவாகரன் மிரட்டல்…

அதிமுக என்ற கட்சி காப்பாற்றப்படும் என்றும், ஆனால் ஆட்சி என்பது முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் கைகளில்தான் உள்ளது என சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் டி.டி.வி.தினகரனிடையே மோதல் முற்றி வருகிறது. இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன், ஆட்சியிலும், கட்சியிலும் தலையிட வேண்டாம் என கடுமையாக எச்சரித்தார்.

இதைத் தொடர்ந்து எடப்பாடி மற்றும் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் ஒருவரை, ஒருவர் தாக்கிப் பேசி வருகின்றனர். பரபரப்பான இந்த சூழ்நிலையில் தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன், அதிமுகவில் இருக்கும் அனைவரும் பங்காளிகள்தான் என தெரிவித்தார்.

கடந்த ஓராண்டாக கட்சி  நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை என அவர் தெரிவித்தார்.

அதிமுக என்ற கட்சி காப்பாற்றப்படும் என்றும், ஆனால் ஆட்சி என்பது முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் கைகளில்தான் உள்ளது எனவும் திவாகரன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் அடுத்த கட்டம் என்பது மேலூரில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தெரியும் என்றும் திவாகரன் கூறினார்.