தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவும் இந்த சூழ்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தனது வாழ்நாளில் முதன்முறையாக பொதுமக்கள் முன்பாக நள்ளிரவு 1.15 மணிக்கு பேட்டியளித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒரே குடும்பமாக ஒற்றுமையாக இருப்பதாக தெரிவித்தார்.
நிர்பந்தம் என்ற வார்த்தையை யாரோ சொல்லிகொடுத்து பன்னீர்செல்வம் பேசுகிறார். என்னிடம் கூட மரியாதையாக இருந்தார்.
ஆனால் சட்டமன்ற கூட்டத்தொடரின் 4 நாட்களில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினுடன் நன்கு சிரித்து பேசினார். கூடிய விரைவில் அவர் அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார்.
மேலும் பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்ய நான் வற்புறுத்தவில்லை எனவும் தெரிவித்தார். எனவே ஓ.பி.எஸ்ஸை ஆட்டிவைப்பது திமுக தான் என அதிரடியாக கூறினார்.
ஆளுநர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வராதது குறித்த கேள்விக்கு நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதேதான் என்னுடைய பதிலும் என கருணாநிதி பாணியில் போல்டாகவும் தெளிவாகவும் பதிலளித்தார் சசிகலா.
