ஓமந்தூரார் குமாராசாமி ராஜா, பி.டி.ராஜன் என இந்திய குடியரசுக்கு முன்பு முதலமைச்சராக இருந்தவர்கள் ஆனாலும் சரி, அதன் பிறகு வந்த ராஜாஜி, காமராஜர், பக்தவச்சலம், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் மக்களை சந்தித்து, எம்ல்ஏவாக இருந்து முதலமைச்சர் ஆனவர்கள்தான்.

ஆனால், தனது கணவர் எம்.ஜி.ராமச்சந்திரன் இறந்ததால், முதலமைச்சராக பதவியேற்றவர் வி.என்.ஜானகி. ஜானகிகயை அடுத்து, மக்களை நேரடியாக சநதிக்காமல், முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார் சசிகலா.

என்னதான் தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சியினரும், சசிகலாவின் அதிருப்தியாளர்களும் கூவி கூவி குட்டி கர்ணம் அடித்தாலும், எல்லாவற்றையும் தூள் தூளாக்கிவிட்டார் சசிகலா என்றுதான் சொல்லியாக வேண்டும்.

தொடர்ந்து ஒ.பிஎஸ் பிரிந்து செல்கிறார். சசிகலாவுக்கு உட்கட்சியில் எதிர்ப்பு என்றெல்லாம் கூறப்பட்டது. இவற்றையெல்லாம் சமாளித்து, இறுதியில் கட்சியில் ஒரு சிறு சலசலப்பு இல்லாமல் (கேபிமுனுசாமியும் சசிகலாவை நேரடியாக எதிர்க்கவில்லை.) அனைவரையும் சரிகட்டி சாமர்த்தியமாக காய் நகர்த்தி, முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.

இவ்வளவு நாள் அரசு எநிதிரம் என்னும் வட்டத்துக்கு வராமல் இருந்த சசிகலா, தற்போது அரசு நிர்வாகம் மற்றும் மக்களை நேடியாக சந்திக்க உள்ளார். இந்த நேரடி பொது வாழ்வு எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பதை காலம் தான் தெளிவுப்படுத்த வேண்டும்.